Header Ads



இலங்கை தேசிய கால்பந்தாட்ட, அணியில் விளையாட வாய்ப்பு



வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஐந்து வீரர்களுக்கு மாத்திரமே, இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியில் விளையாடக்கூடிய வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் அநுர டி சில்வா தெரிவித்தார்.

இலங்கைக்காக விளையாடுவதற்கு வெளிநாடுகளிலுள்ள 12 வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளபோதிலும், அவர்களில் ஐவர் மாத்திரமே இரட்டை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஜேர்மனியில் வாழ்ந்து வரும் மொஹமத் வசீம் ராஸிக் ஏற்கனவே இலங்கை அணியில் இடம்பெற்றவராவார். அவரது சகோதரர் மு க்கும் இலங்கை அணியில் விளையாட அனுமதி இருக்கின்றது

பிரித்தானியாவில் வைட்ஹோக் கழகம் சார்பாக விளையாடும் ஹெமில்டன் மேர்வின், வொக்கிங் கழகம் சார்பாக விளையாடும் ரீவ் செபெஸ்டியன் பீரிஸ் அவரது சகோதரர் ரெயான் அன்தின பீரீஸ் (பூம்மவுத் பல்கலைக்கழக அணி), ஹனீப் மொஹமத் ஹசீப் மொஹமத் (சுவிட்சர்லாந்து, எங்ஸ்ரிஞ்சென் கழகம்), விக்னேஸ்வரன் டக்சன் (சுவிட்சர்லாந்து, லுவாசேன் கழகம்) ஆகியோரே இரட்டை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்துள்ள இலங்கை வம்சாவழி வீரர்களாவர் என அநுர டி சில்வா தெரிவித்தார்.

இவர்களைவிட குளோடியோ மெத்தயஸ் (ஜேர்மனி), கெனிஸ்டன் ரெஜிஸ் (பிரான்ஸ்), கெலி கரத் கிறிஸ்டோபர் (பிரித்தானியா), மணிமெய்துரா லியொன் பெரேரா (ஜேர்மனி), டிவான் அன்தனிப்பிள்ளை (கனடா), சில்கேரியுபா டொச்சோக்வு பிரான்சிஸ் (நைஜீரியா – ஜாவா லேன்) ஆகியோரும் இலங்கைக்காக விளையாட இணக்கம் தெரிவித்துள்ளபோதிலும் அவரக்ள் இரட்டை பிரஜாவுரிமைக்கு இன்னும் விண்ணப்பிக்கவில்லை என அவர் கூறினார்.

(நெவில் அன்தனி)


No comments

Powered by Blogger.