Header Ads



பாராளுமன்றம் வாருங்கள் - பசிலுக்கு கடிதம் அனுப்பிவைப்பு


முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை நாடாளுமன்றத்திற்கு வருமாறு தற்போதைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பசில் ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் அவர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நான்கு வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என மூன்று தேர்தல்களில் வெற்றி பெறக் கூடிய வகையில் மிகப் பெரிய கட்சியை உருவாக்கியவர் நீங்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு உயிர் கொடுத்து, கிராம கிளை சங்கங்கள் முதல் கட்சியின் உயர்மட்டம் வரை சகல நடவடிக்கைகளையும் நீங்களே ஒருங்கிணைத்தீர்கள். இதனால் நீங்கள் இல்லாத ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குறித்து எம்மால் சிந்திக்கக் கூட முடியாது.

எவ்வாறாயினும் இதுவரை கட்சியின் ஸ்தாபகரான நீங்கள் நாடாளுமன்றத்தில் இல்லை. நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கான ஆலோசனைக்காகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டு ரீதியான பங்களிப்பை நாட்டுக்கு வழங்கவும் உங்களது நாடாளுமன்ற வருகை அத்தியவசியமான என நாங்கள் நம்புகிறோம்.

இதனால், மிக விரைவில் நாடாளுமன்றத்திற்கு வருமாறு கௌரவமான கோரிக்கையை விடுக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், காதர் மஸ்தான், நிபுண ரணவக்க உட்பட 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.