Header Ads

பயந்து போன கொரோணா...

சீனாவில் பிறந்தார்

இப்போது உலகம் சுற்றுகிறார்

அக்கரைப்பற்றையும் விடவில்லை

வராத இடத்திற்கு வந்திட்டார்

இனி பயப்படுவார்...

எப்படி பயம் வரும்?

நாங்கள் என்ன ஞானசூனியமா?

இறைவன் விதித்ததைத் தவிர

வேறேதும் அணுகாது எம்மை

அப்படியென்று கூறி தற்காப்பின்றித்திரிய...

இறைவன் விதித்ததுதான்

ஆனாலும் எங்கள் முயற்சி தற்காப்பில் தொடரும்...

இப்போது என்ன

எம்மைத்தொற்றிய கொரோணா

பீசீஆர் ஆல் காட்டிக்கொடுக்கப்பட்டுவிடும்

அரசு சார்பான வக்கீல்கள் போல்....

பொசிடிவ் பீசீஆர் வந்தால்

அரசும் அதிகாரிகளும் திரைப்படம் காட்டுவது போல்

நாங்கள் அல்லோலகல்லோலப்பட மாட்டோம்

ஈமானை இன்னும் உறுதியாக்குவோம்

அதுவே எங்களின் நோயெதிர்ப்பு சக்தியை கூட்டிவிடும்

தொற்றிய கொரோணாவும் கொன்பியுஸாகிவிடும்...

ஒன்றில் கொரோணா தொலைந்து போக வேண்டும்

அல்லது

கொரோணா எம்மோடு போராட வேண்டும்

நாம் வென்று வருவோம் என்ற நம்பிக்கையோடு 

பதில் தாக்குதலை ஈமானோடு தொடுப்போம்...

இறைநாட்டத்தால் நாம் தோற்றுவிட்டால்

நாம் சஹீதுகள் தானே...?

இன்னுமென்ன தாமதம் ஈமானைப் பலப்படுத்த...?

மறுபக்கம் இறந்த உடல் 

நமக்குப் புனிதம் என்பது

இனவாதத்திற்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை

அதனாலோ எரிக்கத் துடிக்கிறது...

நம் இயலாமை 

அகிம்சை வழியிலும் போராட முடியவில்லை

இப்போதும் உயிரோடிருப்பவர்கள் ஈமானைத்தான் பலப்படுத்த வேண்டும்....

இறந்த உடல் 

அடக்குவதுதான் நம் கடமை

எரிப்பதற்கு துணை போவதல்ல

நல்லடக்கம் செய்ய உடலைத் தாருங்கள்

நீங்கள் எரிப்பதானால் எங்களிடம்

அனுமதி கோராதீர்கள்

அனுமதி என்பது வற்புறுத்தலில் பெறுவதல்ல...

எரித்தலுக்கான செலவை நாம் தருவது

இன்னொருவரின் மதுபானச் செலவை 

ஏற்பது போன்று எங்களுக்கு....

எங்களிடம் நல்லடக்கத்திற்காக 

ஒப்படைக்க முடியாத மையித்துகளை

இனவாதத்தின் பேராசையில் எரிக்கும்போது

கொரோணாவும் ஒருநாள் பயந்துபோகும் எம்மைவிட்டு.....!

Dr அப்துல் ரஷாக்

2020.11.26

3 comments:

  1. பயந்து போன கொரோனா...
    அருமையான செய்தி இது கவிதை வடிவில் இருந்தாலும் தன்நம்பிக்கை யை ஊட்டும் கருத்துகள் பொதிந்துள்ளன.
    ஈமானை பலப்படுத்துவதன் மூலம் நிச்சயமாக நோய் எதிர்ப்பு சக்தி உடம்பில் அதிகரிக்கும் அதன் காரணமாக கொரோனாவோ அதை போன்ற வேறு வைரசுகளோ உடம்பில் நோயை ஏற்படுத்த முடியாமல் அழிந்து விடும்.
    நமது நோய் எதிர்ப்பு சக்தியை நாம் ஒவ்வொருவரும் பொசிடிப்F ஆக்கினால் கொரோனா நெகடிப்F ஆகிவிடும்.
    எனவே பயம் வேண்டாம் இதுவும் கடந்து போகும். கொரோனா அழிந்து போகும். நன்றி.

    ReplyDelete
  2. பயந்து போன கொரோனா...

Powered by Blogger.