Header Ads



இஸ்லாம் உள்ளிட்ட சகல மதத் தலைவர்களும், கொரோனாவிலிருந்து நாட்டை மீட்பதற்காக வழிபாடுகளை முன்னெடுக்க பிரதமர் கோரிக்கை


கொவிட்-19 வைரஸ்  தாக்கத்திலிருந்து நாட்டையும் உலகத்தையும் மீட்பதற்காக சகல பௌத்த , இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாம் மதத் தலைவர்களை மத வழிபாடுகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனைக்கமைய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவினால் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்வ மத வழிபாட்டு தளங்களிலும் வழமையாக இடம்பெறும் வழிபாடுகளைப் போன்று இவ்வழிபாடுகளையும் முன்னெடுக்குமாறும் அமைச்சின் செயலாளரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. We pray for the safety of all.... Also we ask the leaders respect last will of evry dying muslim to be buried a d burnt

    ReplyDelete
  2. இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண நியூஸிலாந்து அரசாங்கம் மதவழிபாடுகளை முன்னெடுக்கவில்லை.மாறாக சரியாகத் திட்டமிட்டு அதிகாரிகளின் தியாகம் மக்களின் ஒத்துழைப்பு மிகச் சரியான நிர்வாகம் மூலம் தான் இது இல்லாமல் செய்து விட்டது. ஊழலும், மாபியாவும் நிறைந்த அரசாலும்,சுகாதார அமைப்புகளாலும் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியாது. உண்மையான தீர்வு பெற்றுக் கொள்ள வேண்டுமானால் நியூஸிலாந்து அரசின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.