Header Ads



ஜனாஸாக்களை தகனம் செய்ய கையொப்பம் போடவும், பிரேத பெட்டி வழங்கவும் மறுப்பு - கொழும்பில் அதிரடி


கொழும்பில் கொரேனாவால் மரணமடைந்ததாக கூறப்படும் 2 ஜனாஸாக்களை, தகனம் செய்வதற்கு கையொப்பமும், பெட்டியும் கேட்டபோது அவை மறுக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன

அந்தவகையில் தகனம் செய்வதற்காக 2 முஸ்லிம் குடும்பங்களிடம்கையொப்பம் கேட்டபோது இல்லை,, கையொப்பம் போட முடியாது என திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளன.

மேலும் தகணம் செய்ய பெட்டி வழங்கவும், அந்த  2 முஸ்லிம் குடும்பங்களும் மறுப்புத் தெரிவித்துள்ளன.

இதன்போது முஸ்லிம் சகோதரர் ஒருவருடைய பெயரைக்கூறி. அவர் இலவசமாக பெட்டி வழங்குகிறார், அங்கு போய் பெட்டியை வாங்கி வாருங்கள் எனச் சொல்லப்பட்டபோது, அதற்கும் அந்த முஸ்லிம் குடும்பத்தினர் மறுப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் அந்த 2 ஜனாஸாக்கள் தொடர்பில், என்ன செய்வதென்று தெரியாமல் இழுபறியும், தாமதமும் ஏற்பட்டுள்ளதாக Jaffna Muslim இணையத்திற்கு சமூக சேவையாளர் ஒருவர் குறிப்பிட்டார்.


10 comments:

  1. இப்பதான்யா சரியான முடிவுக்கு வந்துள்ளார்கள்

    ReplyDelete
  2. தைரியமானவர்கள் என்று கூறலாமா ? தமிழர்களிடம் இவ்வாறான தைரியம்
    எப்போதும் உண்டு

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜுஊன் அல்லாஹ் போதுமானவன்

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜுஊன் அல்லாஹ் போதுமானவன்

    ReplyDelete
  5. முதுகெலும்புல்லவா்கள்......

    ReplyDelete
  6. Well done
    ஜனாஸாவை உறவினர்களுக்கு காட்டுவதில்லை தொழுவதட்க்கு இடம் கொடுப்பதில்லை ஆனால்
    பெட்டிக்கு மாத்திரம் நாம் பணம் கொடுக்க வேண்டும்

    ReplyDelete
  7. well done, இப்படித்தான் உங்களது உரிமையை விட்டுப்போடுக்ககூடாது, போராடியாவது பெறவேண்டும். அப்போது தான் மதிக்கபடுவீர்கள்.

    ஆனால் 90% முஸ்லிம்கள் உரிமைகளுக்காக காலில் விழுந்து கெஞ்சுகிறார்கள். சலுகைகளுக்காக முஸ்லிம் தலைவர்கள் கெஞ்சுகுறார்கள்

    ReplyDelete
  8. Very good act, everyone should follow them. Otherwise racist government will keep on cremating. Giving consent and money for cremation will increase the number of corona related death from our community deliberately.

    ReplyDelete
  9. May Allah give courage to our people in taking firm decisions like this.

    May Allah reward jannathul firdouse for those died due to covid and patience to the family members,who lost their relatives.

    ReplyDelete
  10. இலவசமாகப் பெட்டி கொடுக்கும் கேவலங்கெட்ட ஜென்மம் யாராக இருக்குமோ? முசம்மிலாக இருக்குமோ?

    ReplyDelete

Powered by Blogger.