Header Ads



கொரோனா நோயாளர்கள் வீதிகளில், மரணிப்பது குறித்த தகவல் உண்மையில்லை – அஜித்ரோகண


கொரோனா வைரஸ் காரணமாக வீதிகளில் மக்கள் மரணிக்கின்றனர் என வெளியான தகவல்கள் உண்மையில்லை என பொலிஸாரும் சுகாதார அதிகாரிகளும் நிராகரித்துள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளில் வீதீகளில் மக்கள் மரணிக்கின்றனர் என்ற போலியான தகவல் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படுகின்றது என பொலிஸ் பேச்சாளர் அஜித்ரோகண தெரிவித்துள்ளார்.

கொரோன நோயாளிகள் வீதிகளில் மரணிக்கின்றனர் என்பதை காண்பிப்பதற்கான போலியாக உருவாக்கப்பட்ட படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட நிலையில் வீதியில் மரணித்த நிலையில் காணப்பட்ட யாசகர் ஒருவரை தவிர வேறு எவரும் அவ்வாறு மரணிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

போலியான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன,போலியான செய்திகளை பரப்பியவர்களிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்,நாட்டில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய அந்த வகையான படங்களை தகவல்களை பொதுமக்கள் பகிரக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஜெயருவான் பண்டார இருதய நோய் உள்ளவர்களோ அல்லது வேறு நோயாளிகளோ வீதியில் திடீர் என மரணிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் நாங்கள் அவர் கொரோனாவால் உயிரிழந்தார் என்ற முடிவிற்கு வரமுடியாது உயிரிழப்பிற்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிப்பதற்காக விசாரணைகள் இடம்பெறவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.