Header Ads



கொரோனாவிலிருந்து பாதுகாப்பு வேண்டி, ஒரே நேரத்தில் விசேட துஆப் பிரார்தனை


சகல ஜும்ஆ / பிரதான பள்ளிவாயல்களின் நம்பிக்கைப் பொறுபாளர்களுக்கு அல்லது பொறுப்பாளர்களுக்கு

விசேட அறிவித்தல் பிரதான பள்ளிவாசல்களில் / ஜும்ஆ பள்ளிவாயல்களில் கொவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாக்குமாறு வேண்டி ஒரே நேரத்தில் விசேட துஆப் பிரார்தனைகளில் ஈடுபடுதல்.

திகதி: 08.11.2020

நேரம்: பி.ப. 5.00 - 6.00 மணி

நாடளாவிய ரீதியில் உள்ள பௌத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதஸ்தலங்களிலும் 08.11.2020 ஞாயிறு தினம் பி.ப. 5.00 மணி முதல் 6.00 மணி வரை ஒரே நேரத்தில் விசேட பிரார்தனைகளை மேற்கொள்ளுமாறு கௌரவ பிரதமரும், புத்தசாசன, மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமாகிய கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் வேண்டப்பட்டுள்ளது. 

1. நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 அபாயகரமான நிலமைகளைத் தொடர்ந்து உலக மக்கள் அனைவரையும் இலங்கைத் தாய் நாட்டையும் கொவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாக்குமாறும் நாட்டு மக்கள் அனைவரும் சுகம் பெற்று நலமடைய வேண்டியும் துஆப் பிரார்தனை மேற்கொள்ளுமாறு சகல பள்ளிவாயல்களும் வேண்டப்படுகின்றன. 

2. அந்த வகையில் தனிப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இல்லாத பிரதேசங்களில் அனைத்து ஜும்ஆ/  பிரதான பள்ளிவாசல்களில் இந்த விசேட துஆப்பிரார்தனை ஏற்பாடுசெய்யப்பட்டல் வேண்டும்.

3. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில உள்ள மாவட்டங்களில் மாவட்டத்துக்கு ஒரு பிரதான பள்ளியில் மாத்திரம் இவ்விஷேட பிரார்தனை ஏற்பாடு செய்யப்படுதல் போதுமானது.

4. முகமறைப்பு (Mask) அணிவது, 01 மீட்டர் இடைவெளி பேணுவது, சவர்காரமிட்டு கைகளைக் கழுவிக் கொள்தல் அல்லது கிருமிநீக்கி பாவித்து கைகளை சுத்தம் செய்து கொள்தல்  உட்பட அனைத்து கொவிட் - 19 சுகாதார நியமங்களையும் கட்டாயம் பேணுதல் வேண்டும்.

5.. பின்வரும் ஒழுங்குகள் பேணப்படுவது வரவேற்கப்படுகிறது: 

அ) கட்டாயம் மொத்தமாக 25 பேர் மட்டும் கலந்து கொள்ளுதல்

 ஆ) கலந்து கொள்வோரில் 20 அல்லது அதற்கு மேற்பட்டோர் குர்ஆனையும் துஆக்களையும் சரியாக உச்சரிக்கக் கூடிய உலமாக்கள் அல்லது மத்ரசா மாணவர்களாக இருத்தல்; 5 அல்லது அதற்கு குறைந்தோர் அரசியல் பிரமுகர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் பள்ளி நிருவாகிகளாக இருத்தல்.

இ) அனைவரும் வெள்ளை ஆடையும் தொப்பியும் அணிந்திருப்பது சிறந்தது.

ஈ) குர்ஆன், சலவாத்து, மற்றும்  துஆக்கள் ஓதுவதைத் தவிர்ந்த ஏனைய எதுவிதமான உரைகளும் இடம்பெறக் கூடாது. 

உ ) சூரா யாசீன், துஹான், ஸாப்பாத் போன்ற குர்ஆனின் சூராக்களில் ஏதாவதொன்றையும், நபிகளார் மீது சலவாத்துக்களையும், துன்ப துயரங்களின் போது ஓதக்கூடிய துஆக்களையும் ஓதுதல். 

துன்ப துயரங்களின் போது ஓதக்கூடிய துஆக்கள் சில இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.


ஏ. பீ. எம். அஷ்ரப்

பணிப்பாளர்

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் நினைக்களம்


1 comment:

  1. Out of 25, one seat for Mubarak Movlavi, one for Hassan Movlavi.

    ReplyDelete

Powered by Blogger.