Header Ads



குறுகிய காலப்பகுதியில் எம்மால், நாட்டை பாதுகாக்க முடிந்துள்ளது - ஜனாதிபதி விசேட உரை


கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் இதுவரை ரூ.70 ஆயிரம் மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

நாட்டு மக்களுக்கு இன்று (18) இரவு விசேட உரையொன்றை ஆற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார். 

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் சுமார் 69 இலட்சம் மக்கள் என்னை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தனர். நாட்டை பாதுகாப்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாக அமைந்தது. 

குறுகிய காலப்பகுதியில் அதனை எம்மால் செய்ய முடிந்தது. தற்போது, நாட்டு மக்கள் எவ்விதத்தில் அச்சப்பட தேவையில்லை.  புலனாய்வு மற்றும் பாதுகாப்பு பிரிவு பலவீனமடைந்த காரணத்தால் நாடு பாதுகாப்பற்ற நிலைக்கு தளப்பட்டது. 

நான் அதிகாரத்திற்கு வந்த பின்னர் நாடடின் பாதுகாப்பு பிரிவிற்கு உரிய அதிகாரிகளை நியமித்து, அவர்களின் பொறுப்பை சரியாக நிறைவேற்ற அதிகாரத்தை பெற்றுக் கொடுத்தேன். அதேபோல், வீழ்ச்சியடைந்திருந்த புலனாய்வு பிரிவை மறுசீரமைத்து அதற்கு மீண்டும் புத்துயிர் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, எவ்விதத்திலோ நாட்டினுள் பயங்கரவாதத்திற்கு மீண்டும் தலைதூக்க இருந்த வாய்ப்புகள் எம்மால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்பு இந்த நாட்டின் 69 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் என்னை உங்கள் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தனர். அன்று எனக்கு பெரும்பான்மையான சிங்கள மக்கள் வாக்களித்தனர் என்பது உண்மை. பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் மற்றும் சித்தாந்தங்களுக்கு முகங்கொடுத்து சிங்கள இனம், எமது மதம், தேசிய வளங்கள் மற்றும் பாரம்பரிய மரபுரிமைகள் அழிவுறும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றது என்ற நியாயமான அச்சம் இருந்ததால் அவர்கள் அணிதிரண்டனர்.

மக்கள் என்னிடம் முன்வைத்த முக்கிய வேண்டுகோள் 'நாட்டை காப்பாற்றுங்கள்' என்பதாகும். இந்த குறுகிய காலத்தில் மக்கள் கோரியபடி நாட்டைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். மக்கள் இது பற்றி இனியும் அச்சப்படவோ சந்தேகப்படவோ தேவையில்லை.

ஒருமைப்பாட்டை பாதுகாப்பேன்

எனது ஆட்சிக் காலத்தில், இனம், மதம் என்ற பேதமின்றி, அனைத்து குடிமக்களுக்கும் நீதியை உறுதி செய்யும், அவர்களின் உரிமையை பாதுகாக்கும் ஒரு ஆட்சியை நிறுவுவேன் என்றும், இந்த நாட்டின் உச்ச அரசியலமைப்பின் படி நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பேன் என்றும், பௌத்த சாசனத்தை பாதுகாத்து போசிப்பேன் என்றும் அன்று ருவன்வெலிசேய புன்னிய பூமியில் வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் நான் எப்போதும் செயற்பட்டு வந்துள்ளேன்.

ஒவ்வொரு மாதமும் நான் மூன்று நிகாயக்களினதும் முன்னணி பௌத்த பிக்குகள் உள்ளடங்கிய ஆலோசனை சபையை சந்தித்து ஆட்சி குறித்த அவர்களின் ஆலோசனையைப் பெறும் நடைமுறையொன்றையும் நான் பின்பற்றி வருகின்றேன்.

தீவிரவாதிகளால் ஆக்கிரமிப்பு அதிகம்

நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவதற்கு முன்பு, மத தீவிரவாதிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக இந்த நாட்டில் பல உயிர்கள் பலியாகியிருந்தன. பாதாள உலக செயற்பாடுகள் தீவிரம் பெற்று நாடு முழுவதும் கொலைகளின் அலை ஆரம்பமாகியிருந்தது. இலங்கை சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களின் மையமாக மாறியிருந்தது. புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்புப் படைகள் பலவீனமடைந்திருந்த காரணத்தினால் நாடு பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது. தொல்பொருள் பெறுமதிவாய்ந்த வரலாற்று தளங்கள் கூட தீவிரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.

1 comment:

  1. தேர்தலுக்கு முன்பு கொரோனாவால் இறந்த ஆட்களை அடக்கம் செய்துவிட்டு தேர்தல் வெற்றியின் பின்பு இயற்கையாக இறப்பவர்களையும் எறிவூட்டுவார்கள்

    ReplyDelete

Powered by Blogger.