November 01, 2020

றிசாத்திற்காக பிரார்த்தனை செய்வோம்...!


(தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா)

மனிதன் மனிதனாக வாழ நினைத்தாலும் சமூகமும்,சூழலும் சில சமயங்களில் இதற்கான சந்தர்ப்பங்களை வழங்குவதில்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது.குறிப்பாக இன்றைய எமது நிலையினை நாம் மீட்டி பார்ப்பது தான் காலத்திற்கு செய்யும் பெரும் சமர்ப்பணமாகும்.

பாதிக்கப்பட்ட ஒரு சமூகம் தமது தேவைகளையும்,உரிமைகளையும் அடைந்து கொள்வதற்காக எத்தனையோ போராட்டங்களை,தியாகங்களை செயகின்றதை வரலாற்று நெடுகிலும் போராட்டமே வாழ்க்கை என்ற தலைப்பின் கீழ் பேசிக் கொண்டிருப்பதை காணமுடிகின்றது.

இதிலிருந்து இவர்கள் மீளுவதற்காக முயற்சித்தவைகள்  தோல்வியில் சென்றது.பின்னர் பேச்சுவார்த்தை மற்றும் அரசியல் தீர்வுகள் இறுதிப் பரிணாமமாக மாறியுள்ளதை தற்போது எம்மால் நோக்க முடிகின்றது.

விடுதலை என்பதற்கு கருத்து கூற பல புத்திஜீவிகள் முனைந்த போதும் ,இந்த விடுதலை எந்த ஊரை நோக்கி பயணிக்கப் போகின்றது என்ற கேள்விக்கு பதிலினை பெற முடியாத நிலையில் எமது நாட்டின் சிறுபான்மை சமூகம் அங்கலாய்த்துக் கொண்டிருப்பதை காணமுடிகின்றது. 

இப்படிப்பட்ட ஒரு சமூகத்திற்கு அரசில் ரீதியான தமது வாழ்வுரிமையினை மீள பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அரசியல் என்னும் பிரவேகத்துக்கு வலிந்து அழைக்கப்பட்டவர் தான் றிசாத் பதியுதீன் என்கின்ற நாமமாகும்.1990 ஆம் ஆண்டு வடக்கில் மன்னார் மாவட்டத்தில் இருந்து இடம் பெயர்வுக்குள்ளான ஆயிரக்கணக்கான குடும்பங்களில் ஒருவராக றிசாத் பதியுதீனும் உள்ளடக்கப்படுகின்றார்.இந்த இடம் பெயர்வி்ன் வலிகளை சுமந்து கொண்டு அகதி முகாம் வாழ்க்கையினை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது இந்த மக்களின் துயரங்களும்,துன்பங்களும் றிசாத் பதியுதீனை ஆக்கிரமிப்பு செய்கின்றது.இதனது வெளிப்பாடு தான் தமது உரிமைகள் பறிக்கப்பட்ட போது அதனை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என்பதை நிரூபித்துக் காட்ட றிசாத் பதியுதீனுக்கு கிடைத்ததொரு வரமாக இதனை  மக்கள் பார்க்க துவங்கினர்.இதனது வெளிப்பாடு தான் 1999 ஆம் ஆண்டு இடம் பெற்ற பாராளுமன்றத் தேர்தல் அவருக்கு கிடைத்த அங்கீகாரமாகும்.அன்று முதல் இன்று வரை றிசாத் பதியுதீன் என்னும் பெயர் அரசியலியலிலும்,சமூகத்தின் மத்தியிலும் மறக்காமல் பேசப்படும் ஒரு பொருளாக மாறியுள்ளதை பல சான்றுகள் பல சந்தர்ப்பங்களில் ஒளி வீசுகின்றன.

மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசுக்கள் றிசாத் பதயுதீனின் நேர்மயான அரசியல் செயற்பாட்டினை கண்டதுடன்,ஆட்சி அமைப்புக்கு அவரை அரவனைத்து சென்றதையும் இன்றைய அரசியல் நட்சத்திரங்கள் மறந்து விடக் கூடாது நீண்ட அரசியல் பயணித்தின் ஒரு தற்காலிக தடையாக தற்போதைய றிசாத் பதியுதீனின் அவர்களின் சிறை வாழ்வு காணப்பட்ட போதும்,அவரது ஆரம்பம் இன்னும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்தே கொண்டே போகும் என்பதில் அவரும்,அவரது ஆதரவாளர்களும் ஒரு மித்த மனதுடனேயே இருக்கின்றதை எம்மால் நோக்க முடிகின்றது.

அரசியல் நன்பனானவன் எப்போதும் நன்பனும் அல்ல இதே  போன்று எதிரியுமல்ல என்ற அரசியல் கற்றலை மீள பார்க்க வேண்டியுள்ளது.

கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் அவர்களின் ஜனாதிபதி  ஆட்சியில் றிசாத் பதியுதீன் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அமைச்சுக்களை வைத்து அவர் ஆற்றிய பணிகளுக்காக சர்வதேசம் பாராட்டியது.இது போல் அவர் மூலம் எமது நாட்டு மக்கள் அடைந்து  கொண்ட  நன்மைகளை இன்று சிலர் மறந்து பேசினாலும்,அதனை அவர்கள் அனுபவித்தமைக்கு நன்றி கூறக் கூட நேரமில்லாத நிலையினை நாம் கானுகின்றோம்.

மனிதன் மறதிக்குரியவன் ஆனால் செய் நன்றி மறந்தவனாக இருக்க முடியாது என்பதை நாம் ஒவ்வொரு நிமிடமும் நினைவு கூறவிரும்புகின்றோம்.மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் சிறுபான்மை சமூகத்தின் விடியலுக்காக போராடினார்.இன்று அதே பணியினை றிசாத் பதியுதீன் என்கின்ற ஆத்மா செய்கின்றது.அவர் செய்த இந்த தியாகம் இன்று அவரை சிறைக் கம்பிக்குள் முடக்கியுள்ளது.இலங்கை அரசியல் சாாசனத்தின் முக்கிய விதப்புரையான வாக்களிக்கும் உரிமையினை பெற்றுக் கொடுத்தமை தான் இன்று அவர் நான்கு சுவர்களுக்குள் ஒடுக்கப்பட்டு கைதி என்னும் பெயருடன்,கண்டவர்கள் கதை சொல்லும் அளவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நீதியும்,நேர்மையும்,சத்தியமும் தோற்றால் மக்கள் வாழ்வதற்கான பூமி இனி இல்லை என்பதால் இறைவன் ஒருவன் இருக்கின்றான்.,அவன் நீதியாளன்,அநீதி இழைக்கப்பட்ட ஒருவரின் பிரார்த்தனையினை எவ்வித திறையுமின்றி ஏற்றுக் கொள்கின்றவன் என்பதை பலமாக நம்பிய கூட்டத்தினர் கேட்கும் துஆ பிரார்த்தனை நிச்சயமாக அங்கீகரிக்கப்படும் என்பது ஈமானிய உள்ளங்களின் நம்பிக்கையாகும்.

1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட வடபுல மக்களின் கருப்பு தினமான இந்த ஒக்டோபர் மாதம் நினைவு கூறப்படுகின்ற போது,இந்த சமூகத்தின் விடியலுக்காக புறப்பட்ட றிசாத் பதியுதீன் என்னும் நாமம் இன்றைய மாதத்தில் சிறைப்படுத்தப்பட்டுள்ளது மீண்டும் ஒரு கருப்பு நாளின் வரலாற்று பதிவுக்கு வழி வகுத்துள்ளது.

பிறக்கின்ற எவரும் தலைவராக பிறப்பதில்லை,மாற்றமாக அவர்கள் சமூகத்தின் உண்ர்வுகளால் செதுக்கப்படுகின்ற சிப்பிகள் என்பதால் அவர்கள் இறைவனின் அருளால் உயர்வு அடைகின்றார் என்பது தெளிவாகின்றது.மக்களின் விடிவுக்காக தன்னை அர்ப்பணம் செய்தவர்கள் மனிதர்களின் மனங்களில் வாழும் நினைவுகள்,இதற்கொப்ப வடக்கு மக்களின் வாக்குரிமையினை பாதுாக்க எடுத்த முயற்சியானது இன்றைய றிசாத் பதியுதீனை கம்பிக்குள் தள்ளி அழகு பார்க்கின்றது.

பறக்க சிறகுகள் இல்லை

பார்ப்பதற்கு கண்கள் இல்லை

கம்பிக் கூட்டின் கைகளின் தேய்வுகள்

மனதில் வலிக்கிறது-இறைவா

உன் கன்னியத்தின் பொருட்டால்

விடுதலையினை றிசாத் பதியுதீனுக்கு

வழங்குவாயாக,…….

இந்த பிரார்த்தனைகள் தான் இன்று மூலை முடுக்களில் எல்லாம் ஓங்கி ஒலிக்கும் அசரீரியின் மௌன சப்தங்களாகும்.


1 கருத்துரைகள்:

எந்தக்கட்சியானாலும் தம் மக்களுக்காக குரல் கொடுத்தவர். சிங்கள இனவாதிகளை தனியாக நின்று எதிர்த்தவர்.

அல்லாஹ் இவரை விரைவில் விடுவிக்க அருள் புரியட்டும்.

Post a Comment