Header Ads



40 வருடங்களாக எந்த அபிவிருத்தியும் நடக்காத பாடசாலையில், 19 வருடங்களுக்கு பின் 3 மாணவர்கள் சித்தி


- Hafees -

வத்தேகம கல்வி வலயத்தில் பன்விலை கல்வி கோட்டத்தில் பெருந்தோட்டப் பிரதேசத்தில் படந்த 40 வருடங்களாக எதுவித அபிவிருத்தியும் நடக்காத பாடசாலையான ஹுலுகங்கை முஸ்லிம் வித்தியாலயத்தில்  இம்முறை மூன்று மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துந்துள்ளர்.இது 19 வருடங்களின் பின்  ஏற்பட்ட நிகழ்வாகும்.

இதி பற்றி அதிபர் எஸ்.ஏ. இத்ரீஸ் தெரிவித்தாவது-

இங்கு கல்வி கற்கக்கூடிய மாணவர்கள் மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தைச் சேர்ந்தவராவார்கள்.இந்த பாடசாலை அமைந்திருப்பதும் கஷ்டப் பிரதேசத்திலாகும்.இவ்வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 11 மாணவர்கள் தோற்றி அதில் 3 மாணவிகள் சித்தியடைந்துள்ளனர். அவர்கள் முறையே பாத்திமா ஸஸ்னா-1(77), பாத்திமா ஹப்னா-(174), பாத்திமா நஸ்லிமா-(165) ஆகியோர்களாகும்.

பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுக்கும் பழைய மாணவர் சங்கமும் மாணவர்களுக்கு கல்வி புகட்டிய  ஆசிரியை திருமதி .ரம்சானா மஹ்ரூப் அவர்களுக்கு விசேடமாக தமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.


 

1 comment:

  1. May Almighty Allah Bless all these kids, Village and the School.
    Who ever have wealth kindly help this Schools developments....

    ReplyDelete

Powered by Blogger.