Header Ads



கொரோனா தொடர்பில் இலங்கையர்களிடையே 3 மனநிலைகள் - Dr மஹேஷ்


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுதல் மற்றும் அதில் உயிரிழப்பது 0.24 வீதமாக இருந்தாலும் கொரோனா காரணமாக மக்கள் பொதுவான மூன்று மனநிலை தொடர்பான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மனநல மருத்துவ ஆலோசகருமான மஹேஷ் ராஜசூரிய தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் அதற்கு அடுத்ததாக எனக்கு என்ன நடக்கும்?. எனக்கு நெருக்கமானவர்களுக்கு என்ன நடக்கும் அவர்கள் இறந்து விடுவார்களா? என்ற இரண்டு பிரதான மனநல பிரச்சினைகளை எதிர்க்கொள்கின்றனர். இந்த அச்சங்களை சரியான திசை நோக்கி சுகாதார முறைகளின்படி கையாண்டால், கொரோனா பரவுவதை குறைக்க முடியும்.

அத்துடன் “சுய கட்டுப்பாட்டை இழத்தால்” அதாவது எனது உயிர் தொடர்பாக என்னிடம் இருக்கும் கட்டுப்பாடு என்னை விட்டு நீங்கி விடுமா? என்பது மூன்றாவது அச்சம், இதற்கு பதிலளிப்பது சிரமமானது எனவும் மருத்துவர் மஹேஷ் ராஜசூரிய குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் மக்கள் இந்த சந்தர்ப்பத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக சுகாதார பாதுகாப்பு முறைகளை சரியாக பயன்படுத்துவது முக்கியமானது. அத்துடன் கொரோனா நோய் தொடர்பாக தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்வது பொருத்தமற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.