Header Ads



தெரண - சிரச பலாய், 2 பில்லியன் ரூபா நட்டஈடு கோரப்படுகிறது


எம்.டி.வி நிறுவனத்திற்கு சொந்தமான சிரச நியூஸ் பெஸ்ட் தனியார் நிறுவனத்தின் மூலம் ஜோர்ஜ் ஸ்டுவரட் ஹெல்த் தனியார் நிறுவத்திற்கும் அந்த நிறுவனத்தின் தலைவர் திலித் ஜயவீரவிற்கும் மற்றும் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் எதிராக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அபகீர்த்தி ஏற்படும் வகையிலான செய்திகளை வெளியிட வேண்டாம் என கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (23) தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 

ஜோர்ஜ் ஸ்டுவரட் ஹெல்த் தனியார் நிறுவனத்தின் சட்டத்தரணிகள் தமது நிறுவனத்திற்கு எதிராக நியூஸ் பெஸ்ட் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.டி.வி தனியார் நிறுவனம் அபகீர்த்தியை ஏற்படுத்தியதாக தெரிவித்து இரண்டு பில்லியன் ரூபா நட்டஈடு கோரி தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. 

ஜோர்ஜ் ஸ்டுவரட் ஹெல்த் தனியார் நிறுவனம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா தலைமையிலான சட்டத்தரணிகள் குழு இன்று (23) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில், எம்.டி.வி நிறுவனத்திற்கு சொந்தமான நியூஸ் பெஸ்ட் தனியார் நிறுவனத்திற்கு எதிரான வழக்கை தாக்கல் செய்தது. 

சிரச நியூஸ் பெஸ்ட் தனது பிரதான செய்திகளில் ஜோர்ஜ் ஸ்டுவரட் ஹெல்த் தனியார் நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தின் தலைவர் திலித் ஜயவீரவிற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிடுவதை தடுக்கும் வகையிலான தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்திடம் மனுதாரர்கள் கோரியிருந்தனர். 

நவம்பர் 11, 13, 16 மற்றும் 19 ஆம் திகதிகளில், கொவிட் - 19 துரித என்டிஜென் பரிசோதனை கருவிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் ஜோர்ஜ் ஸ்டுவரட் ஹெல்த் தனியார் நிறுவனம் போலியான மற்றும் வேண்டுமென்று புனையப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய அவதூறான செய்திகளை சிரச நியூஸ் பெஸ்ட் தனியார் நிறுவனம் வெளியிட்டதாக மனுதாரர்கள் மன்றில் தெரிவித்தனர். 

இதனால் ஏற்பட்ட அபகீர்த்திக்கு நட்ட ஈடாக 2 பில்லியன் ரூபாவை பிரதிவாதிகள் செலுத்த வேண்டும் என உத்தரவிட கோரி மனுதாரர்கள் மன்றில் கோரியிருந்தனர். 

பிரதிவாதிகள் எப்போதும் மனுதாரர்களின் உரிமைகளை பாதிக்கும் வகையிலும், தீங்கிழைக்கும் வகையிலும் செயற்பட்டு வருவதாக ஜோர்ஜ் ஸ்டுவரட் ஹெல்த் தனியார் நிறுவனம் சார்பில் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திலித் ஜயவீர தலைமை வகிக்கும் தெரண ஊடக வலையமைப்புக்கும், ஆர்.ராஜ மகேந்திரன் தலைமை வகிக்கும் எம்.டி.வி நிறுவனத்திற்கு சொந்தமான சிரச நியூஸ் பெஸ்ட் தனியார் நிறுவனத்திற்கும் இடையில் நீண்ட காலமாக நிலவும் ஊடக போட்டித் தன்மை மற்றும் விரோத நிலைமை ஆகியன இதற்கு காரணம் என மனுதாரர்கள் தெரிவித்தனர். 

மனுதாரர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட விடயங்களை கவனத்தில் எடுத்துக்கொண்ட கொழும்பு மாவட்ட நீதிமன்றம் ஜோர்ஜ் ஸ்டுவரட் ஹெல்த் தனியார் நிறுவத்திற்கும் அந்த நிறுவனத்தின் தலைவர் திலித் ஜயவீரவிற்கும் மற்றும் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் எதிராக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அபகீர்த்தி ஏற்படும் வகையிலான செய்திகளை வெளியிட வேண்டாம் என தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

1 comment:

  1. அவர்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தாக்களி சட்டினி
    Blood for them, tomato chutney for us.
    ඔවුන් සඳහා ලේ, තක්කාලි චට්නි අප වෙනුවෙන්.

    ReplyDelete

Powered by Blogger.