Header Ads



நெகட்டிவ் வந்தால் 24 மணித்தியாலங்களுக்குள், ஜனாஸாக்களை கையளிப்பதாக பவித்திரா உறுதி


- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் -


சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர், முஜீபுர் ரஹ்மானும் பங்கேற்றுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதில், கதைப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், சில முஸ்லிம்களின் உடல்கள், பழுதடைந்த பின்னரே உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சில உடல்களில் கொரோனா தொற்று இல்லாத போதும், அவை  பீசீஆர் பரிசோதனைக்காக காத்திருப்பதால் 3 அல்லது 4 நாட்களில் பின், நெகட்டிவ் கண்டறியப்பட்ட பின்னர் ஒப்படைக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில் கொரோனா சந்தேகத்தில் மரணிப்பவர்களுக்காக பீசீஆர் மேற்கொள்ளப்படும் போது நெகட்டிவ் வந்தால், 24 மணித்தியாலத்திற்குள்  அவர்களின் உடல்களை உறவினர்களிடம் கையளிக்க, இதன்போது சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி உறுதியளித்துள்ளார்.

அத்துடன் முஸ்லிம்கள் மிகவிரைவில் தமது உடல்களை அடக்கி விடுவார்கள் என்பதை ஏற்றுக்கொண்ட அவர், இதுதொடர்பில் தனிப்பிரிவு ஒன்றை நிறுவுமாறும் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டார்.

தனிப்பிரிவு ஒன்றின் மூலம் மரணிப்பவர்கள் மீது மேற்கொள்ளப்படும் பீசீஆர்  முடிவுகளை விரைவில் பெற்றுக்கொண்டு, அதன்மூலம் ஜனாஸாக்களை விரைவில் விடுவிக்க முடியுமென்ற நம்பிக்கையையும், அவர் இதன்போது வெளியிட்டுள்ளார்.

அதேவேளை பீசீஆர் முடிவுகளின் படி, பொசிட்டில் வந்த ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுகின்றமையும், இதுதொடர்பில் முஸ்லிம் சமூகம் மிகுந்த வேதனையுற்றிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


இந்தத் தகவல்களை பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், Jaffna Muslim இணையத்திற்கு உறுதிப்படுத்தினார்.


6 comments:

  1. Negative வந்த பிறகு 24 மணித்தியாலத்தில் ஜனாஸாவை கையளிப்பதை விட மரணம் ஏற்பட்டு எத்தனை மணித்தியாலத்தில் PCR முடிவு கிடைக்கப் பெறும் என்பதே முக்கியம்.

    ReplyDelete
  2. பாராளுமன்றத்தில் முஜீபுர்ரஹ்மானின் குரலை மௌனமாக்கும் செயல். விலை போகாமலிருக்க பிரார்த்திக்கிறோம்

    ReplyDelete
  3. Dear brothers present situation we can.t do anything against them.BE PATIENT
    SALATH QUNOOTH
    DUA AND BELEIVE IN ALLAH (IMAAAN)
    WALLAHI ALLAH WILL HELP US.
    HE IS RULER.HE IS THE CONTROLLER.
    HE IS THE POWER IN THE WORLD.
    IN THE QURAN 25 ANBIYAS STORY IS TEACHING THIS UMMAH.
    WE ARE NOT ALLOWED TO DO ALMIGHTY.S JOB.
    WE SHOULD DO OUR (SLAVE)JOB ONLY.
    ALLAH IS WITH US.FIRAWN QAAROON AAD SADDATH.NAMROOTH ALL OF THEM WHERE HAS GONE???????

    ReplyDelete
  4. இதேபோல் எல்லா முஸ்லீம்களும் உறுதியாக இருக்க வேண்டும் .

    ReplyDelete
  5. Immediately burial of any dead body as Muslims usually practice,,, is the proper and safer method to protect the living people from Covid-19. Instead keeping this bodies in hospital or lockers will only increase the chance of spreading virus to living people.

    Unfortunately, so called learned or Racist do not understand this scientific truth.

    Hope GOD will open their politically and racially infected minds for the well being of the citizens.

    ReplyDelete
  6. Using strong chemicals on dead body and destroy the virus
    And could hand over for burial. Is it possible?

    ReplyDelete

Powered by Blogger.