Header Ads



20 க்கு ஆதரவளித்த முஸ்லிம் Mp க்களை, அரசாங்கத்துடன் இணைக்கக் கூடாது - குணதாச அமரசேகர


20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைத்துக்கொள்ள வேண்டாம் என சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

வாராந்த தேசிய பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு எந்த கட்சியை சேர்ந்தவர்கள் ஆதரவளித்தாலும் அவர்களில் எவரையும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் இணைத்துக்கொள்ளக் கூடாது என்பது பிரதான விடயம்.

அவர்கள் ஏதேனும் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கலாம். முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைத்துக்கொண்டால், அரசாங்கத்தில் இருந்து விலக போவதாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

நாங்களும் அதே நிலைப்பாட்டிலேயே உள்ளோம். வாக்களித்தாலும் அவர்களை அரசாங்கத்துடன் இணைத்துக்கொள்ளக் கூடாது.

அரசாங்கம் இது தொடர்பாக கடுமையான தீர்மானத்தில் இருக்க வேண்டும். வாக்களித்தாலும் அவர்களுக்கு எந்த அதிகாரத்தையும் வழங்கக் கூடாது. அமைச்சர் பதவி, அமைப்பாளர்கள் பதவிகள் என எதனையும் அவர்களுக்கு வழங்கக் கூடாது.

எமது சிங்கள மக்களுக்கு தேசிய உணர்வு கிடையாது. காரணம் எதுவாக இருந்தாலும் எமது தேசிய அமைப்பின் எதிர்ப்பார்ப்பு இன்னும் நிறைவேறவில்லை.

சிங்கள மக்களை ஒன்றிணைக்க முடியாது போயுள்ளது. சிங்கள மக்கள் ஒன்றிணையாவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை. சிங்கள அமைப்புகளுக்கு சிங்கள மக்கள் மற்றும் தேசியம் தொடர்பான உணர்வு இருக்க வேண்டும் எனவும் குணதாச அமரசேகர குறிப்பிட்டுள்ளார்.

9 comments:

  1. Bcs of u idiots, this country having big problem and cant move on.

    ReplyDelete
  2. சிங்கள மக்கள் ஒன்றிணையா விட்டால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லையென இவர்கள் தெரிவிப்பது பிற்போக்கான கருத்தாகும்.இவ்வாறே நாட்டிலுள்ள ஏனைய சமூகங்களும் தங்கள் தங்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் போக்கை கையாள முற்பட்டு செயல் பட்டால் நாட்டின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதை இந்த கலாநிதிகள்
    சிந்திக்க வேண்டும்.பல்லின சமூகங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் அரசால்,ஆட்சியாளர்களால், அதன் புத்திஜீவிகளால் எல்லா மக்களையும் அரவணைத்து ஒற்றுமைப் படுத்தி செல்லக்கூடிய ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும், செயற்பாடுகளையும் முன்வைக்காமல் இவ்வாறான குரோதங்களையும்
    பிரிவினை வாதங்களையும் முன்வைத்து அவைகளுக்கு ஆதரவை தேடினால் இந்த நாட்டின்
    எதிர் காலம் கேள்விக்குறியாகும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.அதற்காக முஸ்லீம்
    அரசியல் வாதிகளின் இந்த செயற்பாட்டை நியாயப்படுத்துவதாக கொள்ள முடியாது.இவர்களின் கள்ளத்தனமான,கபடத்தனமான சுயநலத்துடனான
    செயற்பாடுகளினால் முஸ்லிம் சமூகம் இன்று தலைகுனிந்து நிற்கின்றது.எதயும் வெளிப்படையாகவும் இதய சுத்தியுடனும் பொதுநல
    நோக்குடனும் தலைமைகள் சிந்திக்க வேண்டும்,செயல்பட வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது என்பதை கூட விளங்க முடியாத வர்கள் தான் இவர்கள் என்பது மிகவும் கசப்பான உண்மையாகும்.

    ReplyDelete
  3. சுப்பர், Well Said.
    எதிரிகளை நம்பினாலும் துரோகிகளை நம்பமுடியாது.

    பணம் பதவிக்களுக்கு ஆசைப்பட்டு, ஒரு கட்சியில் இருந்து கொண்டு மற்றய கட்சிக்கு வாக்களித்தவர்கள், இன்னொரு கட்சியோ, வெளி நாடோ இதை விட அதிக பணம் கொடுத்தால் என்ன செய்வார்கள்?

    ReplyDelete
  4. இது நல்ல கத அப்பிடி எண்டா எங்கட கனவுகள் என்ன ஆகிற கைசேதமே !

    ReplyDelete
  5. Whatever his motive is, his stand on this issue must be commended. This is the only way to stop the Muslim MPs from turning into "Baldi Naanas".

    ReplyDelete
  6. This country not only for sinhalist.moda haamuduru inakankg ape rate iwarai

    ReplyDelete
  7. சாகப் போகும் இந்த வயதில் சாகாத இனவாத வரம் வேண்டும் என்று வாதிடும் இந்த இனவாத பூதங்களால் நாடு முன்னேற முடியாது

    ReplyDelete
  8. சாகப் போகும் இந்த வயதில் சாகாத இனவாத வரம் வேண்டும் என்று வாதிடும் இந்த இனவாத பூதங்களால் நாடு முன்னேற முடியாது

    ReplyDelete

Powered by Blogger.