Header Ads



195 புள்ளிகளைப் பெற்று ஹம்பாந்தோட்டை இக்ரா வித்தியாலய, கமூர்தீன் பாத்திமா கிபா வரலாற்றுச் சாதனை


- Nadeera Nasurdeen -

2020 ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில்  பரீட்சை  பெறுபேறுகளின் படி ஹம்பாந்தோட்டை இக்ரா ஆரம்ப வித்தியாலய மாணவி கமூர்தீன் கிபா 195 புள்ளிகளைப் பெற்று மாகாணத்தில் முதலிடம் பிடித்துள்ளார். 

இம்மாணவி கமூர்தீன், அனூபா நிஷா ஆகிய தம்பதிகளின் புதல்வியாவார்.

 பாடசாலையின் அதிபர் எம். இசட். எம். இர்பான் தெரிவிக்கையில், 

இம்முறை வெளியான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் எமது பாடசாலையைச் சேர்ந்த 14 பிள்ளைகள் சித்தியடைந்துள்ளனர் எனவும் 195 புள்ளிகளைப் பெற்று கே. எப். கிபா என்ற மாணவியே  வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் எனவும் தெரிவித்தார். மேலும் சாதனை படைத்த மாணவி கிபாவுக்கும் சித்தியடைந்த ஏனைய மாணவர்களுக்கும் தாம் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு கற்பித்த ஆசிரியர்களுக்கும் நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார்.  

1. கே. எப். கிபா -195

2. எம் ஆர். எப். ரிப்தா-177 

3. டீ. ஆர். எப்.  ரிபாதா- 176 

4.  எம். எப். சப்ரான் - 175

5. டீ. எப். எப்.  ரஹ்மா - 173

6. ஆர். எப். ஷிம்னா - 173

7.  எம். எப். எப்.  நுஹா-170

8. டீ. ஆர். டீ.  ஆதிப் - 168

9. எம். இசட். எப்.  ஸும்ரா - 166

10. ஏ. மஸீ ஷராப் - 164

11. எம். எப். எப். ருமானா - 164

12. எம். எஸ். எம். சல்மான் அல் பாரிஸ் - 162

13. ஆர். எம். எப். செய்னப் - 161

14.பீ. எப். எம். எம். சாஹித் -161

No comments

Powered by Blogger.