Header Ads



நோயாளி என அறிவிக்கப்பட்டவர் பின் நோயாளியில்லை என அறிவிக்கப்படும் சம்பவங்கள் -PCR முடிவுகள்குறித்து சந்தேகம்


இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சில பிசிஆர் பரிசோதனை முடிவுகள் குறித்து சந்தேகங்கள் வெளியாகியுள்ளன.

முதலில் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்ட பலர் பின்னர் நோயினால் பாதிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

மருத்துவ ஆய்வு கூட தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவிகுமுதேஸ் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

முதல் தடவை நோயாளி என அறிவிக்கப்பட்ட ஒருவர் 14 நாட்களின் பின்னரே நோயாளியில்லை என அடையாளம் காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

முதலில் நோயாளி என ஒருவர் அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் பாதிக்கப்படவில்லை என்ற அறிவிப்பு அடுத்த ஓரிருநாட்களில் வெளியாகின்றது என்றால் அதன் அர்த்தம் ஆய்வு கூடசோதனைகளி;ல் தவறு நிகழ்ந்துள்ளது என்பதே என அவர் தெரிவித்துள்ளார்.

நோயாளி என அறிவிக்கப்பட்டவர்கள் அடுத்த ஒரிருநாட்களில் நோயாளிகள் இல்லை என அறிவிப்பு வெளியாவது குறித்து கரிசனை வெளியாகியுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைமை செயலாளர் மருத்துவர் ஹரிதே அலுத்கே தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. is it applicable for american president?

    ReplyDelete
  2. இது ஒன்றும் புதுசு இல்ல... உடலை எரிக்கும் முதல் பொசிட்டிவ் ரிப்போர்ட். எல்லாம் முடிஞ்சு சாம்பல் ஆனா பிறகு நெகடிவ். தொழில்நுட்பம் சரியாதான் இருக்கு... இனவாத சுவிச் ஆஃப் பண்ணி விட்டால் சரியா காட்டும்.

    ReplyDelete
  3. Under this status of laboratory results, they burnt many dead bodies adamantly.

    If proven, the tests are wrong, authority should take the responsibilities of wrong decision, that harmed the mental status of the affected people.

    ReplyDelete
  4. இதென்டாலும் பரவாயில்லை என்டு சொல்லலாம். வீணாக இரண்டு மூன்று ஜனாசாக்கள் எரிக்கப்பட்டுள்ளனவே. இதற்கு யார் பொறுப்பு?

    ReplyDelete

Powered by Blogger.