October 23, 2020

பசிலை Mp ஆக, அமைச்சராக பார்க்க ஆசைப்படுகிறேன் - எனவே ஆதரவாக வாக்களித்தேன்


இரட்டை பிரஜாவுரிமை விதிக்கு  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரஃப் முதுநபீன் ஆதரவாக வாக்களித்ததைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,

நான் எதிர்காலத்தில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷவை நாடாளுமன்றத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக அமைச்சராக பார்ப்பதில் அக மகிழ்ச்சியடைகிறேன் என்று முஸர்ரஃப் எம்.பி. தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ நாடாளுமன்றத்திற்கு வருவதானது முஸ்லிம் சமூகத்திற்கும் பிற சிறுபான்மை சமூகங்களுக்கும் ஒருபொழுதும் எந்தவித தீங்கும் விளைவிக்காது என நான் திடமாக நம்பியதால் 20 ம் திருத்தத்தில் இருந்த இரட்டை பிரஜாவுரிமை பிரிவிற்கு தனது தனிப்பட்ட ஆதரவினை தெரிவித்திருந்தேன். 

அமைச்சர்களான  உதய கம்மன்பில எம்.பி., விமல் வீரவன்ச எம்.பி. மற்றும் அரசாங்கத்தின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள்  முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ பாராளுமன்றத்திற்கு வருவதை எதிர்த்தனர் என்பது நாமறிந்த உண்மை. ஏனெனில் இரட்டை பிரஜாவுரிமையுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ பாராளுமன்றத்திற்கு வந்தால் இனவாத மற்றும் மதவாதிகளுக்கும் இனவாத மற்றும் மதவாதத்திற்கும் 

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ ஒருபோதும் ஆதரவாக செயற்படமாட்டார் என்பதனால் அவர்கள் அதனை எதிர்த்தனர். 

இனவாதம் மற்றும் மதவாதத்ததை மட்டுமே வைத்து அரசியல் செய்யும் இந்த இனவாத அரசியல் வாதிகளுக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷவின் பாராளுமன்ற பிரவேசம் ஒரு விசமாகவே இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. 20 வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த இரட்டை குடியுரிமை என்ற பிரிவை அவர்கள் எதிர்த்ததற்கான காரணமும் அதுவேயாகும். 


முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ தனது தொலைநோக்குள்ள தலைமைத்துவ குணங்களால் முஸ்லிம் சமூகத்தால் இன்னும் நேசிக்கப்படுகிற ஒருவராக காணப்படுகின்றார். 

பாராளுமன்றத்தில் அவர் இருப்பது நிச்சயமாக சமூகங்களிடையே குறிப்பாக சிறுபான்மை சமூகங்கள் பெரும்பான்மை சமூகத்துடன்  நல்லிணக்கம், சமாதானம், ஒற்றுமை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வளர்ப்பதற்கான வலுவான பாதையை வகுக்கும் என்று நான் நம்புகிறேன். 

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ  மனிதநேயமுள்ள ஒரு மனிதர்.  2010-2015 ஆண்டளவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியின் போது அவரது மனித நேயம் இனவாதமற்ற தன்மை என்பனவற்றை அவர் பல நாட்டுக்கு நன்மை பயக்கக்கூடிய திட.டங்களால் அவற்றை நிரூபித்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ 20 ஆவது திருத்தம் மூலம் நாடளுமன்றத்திற்கு வரப்போவதனை உணர்ந்த  அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோர் அவரின் வருகையை மிகக் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் அதிமேதகு ஜனாதிபதி கோதபாய ராஜபக்‌ஷ 2021 ல் கொண்டு வரப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் இந்த விதி (இரட்டை பிரஜாவுரிமை) சேர்க்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அவர்களை திருபதிப்படுத்த அளித்த வாக்குறுதியின் பின்னர் அவர்கள் நேற்று (2020.10.22) இந்த பிரிவுக்கு வாக்களிக்க முடிவு செய்தனர்.  புதிய அரசியலமைப்பு 2021 இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இனவாத மற்றும் மதவாதத்தினை மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்யும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்த விதிமுறையை (இரட்டை குடியுரிமை விதி) உண்மையிலேயே எதிர்த்தனர், ஆனால் இறுதியாக அவர்கள் அதை எதிர்க்க எந்த வழியையும் இல்லாமல் அதற்கு ஆதரவு வழங்க வேண்டியிருந்தது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராக வருகிறார் என்பது மிகவும் வரவேற்கத்தக்கது, இந்த அரசாங்கத்தை தனது யுக்தியைப்பயன்படுத்தி கொண்டு வந்தவர் அவர் என்பதால் அவரின் வருகைக்கு பின்னர் பாராளுமன்றம் சுமூகமாக நகர முடியும் என நான் நம்புகிறேன்.  

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ,  விமல் வீரவன்ச எம்.பி. மற்றும் உதய கம்மன்பில எம்.பி. போல் இனவாத மற்றும் மதவாத அரசியல்வாதியொருவர் அல்ல, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அவர்களின் சிந்தனையில் தான் வடக்கின் வசந்தம் மற்றும் கிழக்கின் உதயம் என்பன உருவாக்கப்பட்டன.  

மேலும், இந்த இரண்டு திட்டங்களாலும் இவ் இரண்டு மாகாணங்களும் பல்துறை அபிவிருத்தி கண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே  முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ  பாராளுமன்றத்திற்கு வருவதை தடுக்கும் நோக்கில் எதிர்ப்பு வெளியிடப்பட்ட அந்த பிரிவிற்கு இனவாத மற்றும் மதவாத அரசியல்வாதிகளுக்கு ஒரு சாட்டையடியாகவும் இன நல்லிணகலகத்தினை வலுவூட்ட பாராளுமன்றத்தினுள் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ வருவது மிகவும் அவசியமாகும் என்பதனை உணர்ந்ததன் அடிப்படையில் தான் நான் 20 ம் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த இரட்டை பிரஜாவுரிமை உடைய இலங்கைப் பிரஜை  பாராளுமன்றத்திற்கு வர வழிசெய்யும் திருத்தத்திற்கு ஆதரவு வழங்கினேன் என தனது ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.


14 கருத்துரைகள்:

பஸில் ராஜபக்ச பாராளுமன்றம் வருவது முஸ்லிம்களுக்கு நன்மை உண்டாகும்ன்னு நீங்க நம்புறீங்க, ரைட்டு, அப்படி நன்மை கிடைக்கும் விடயத்தை எதிர்த்து உங்கள் தலைவர் ரிசாட் பதியுதீன் ஏன் விரும்பவில்லை? எதற்க்கு எதிர்த்து வாக்களித்தார்?

பதவிக்கும் காசுக்கும் வாக்களித்து விட்டு விடுற கதைகளை பார்...!

ஆஹா.என்ன அருமையான கருத்து. தம்பி தங்கக் கம்பி.இதுக்கு எவ்வளவு......ஒதுக்கப்பட்டது.பாவம்பா உங்கள் தலைவர். ஏமாற்றி விட்டீர்களே.

இவர் ஆசையில் இடிவிழ!

So neenga basil a paaka aasai .ampara people proved that they are fools again.

ஜோக்கு அடிப்பதில் வடிவேல் கவுண்டமணி செந்தில் போன்றவர்களையும் மிஞ்சிவிட்டார்!

இவனுக்கெள்ளாம் வாக்களித்த மக்களுக்கு செருப்பால் அடிக்க வேண்டும்!

அப்ப சட்டம் பசிலுக்கு மட்டுமா???
இல்லாட்டி அதுக்கு பிறகு வருபவர்களுக்குமா? சேர்...

எல்லாரும் முட்டாள் இல்ல சார்...

பசில் மாத்திரமல்ல மஹிந்த மற்றும் ஜனாதிபதி கோத்தபய அவரகளும இன மதவாதமற்றவரகளாவர். தேர்தல் சமயத்தில் பேசப்படும் எதனையும் கணக்கில் எடுக்கக்கூடாது. முஸ்லிம் மக்கள் அனைவரும் என்றும் ராஜபக்ஷர்களுடன் இணைந்திருந்தே தமது சமூகத் தேவைகளை அடைய வேண்டும், அடைந்தும் இருக்கின்றார்கள். . அதனை இவரகளும் மறுக்கவில்லை. முஸ்லிம்கள் என்றும் தாம் பேசும் மொழிக்காகவோ அல்லது தனிப்பிரதேசம் ஒன்றினை அடைவதற்காகவோ அல்லது சிங்கள பெரும்பான்மை இனத்திற்கு எதிராகப் போராடியதில்லை. தமது மத சம்பிரதாயங்களைப் பேணி எங்களுடன் ஒற்றுமையாக நடக்கக்கூடிய எவராக இருந்தாலும் எங்களுககு முழு சம்மதம்தான்.

காரணம் நியாயமானதாக இருக்கலாம்;
காரியம்  நியாயமானது ஆக வேண்டும்.

This comment has been removed by the author.

The Law about Dual citizens is to be changed in 2021, i.e. in not more than a year's time. Can Basil become an MP or Minister without there being an Election before the Law is changed? Even if we assume that he can become an MP/Minister before that, can he continue in that position AFTER the Law is changed?

Mr.Musharraf, your justification doesn't seem to hold water. Think again.

நான் சீப்பை பத்திரமாக பாதுகாத்து சரியாக முகூர்த்த நேரத்தில் எடுத்துக் கொடுத்தேன் .ஏனென்றால் கலியாணம் நடக்கவேண்டும். - என்று கூறுவது போல் உள்ளது முத்துநபீன் தம்பியின் கதை.* தம்பி இன்னும் எதிர்காலத்தில் என்னென்ன சாதனை செய்யக்காத்திருக்கிறதோ தெய்வமே!!!!!

My following comment made at 09.00 pm on 23rd Oct. not published almost 15 hours later.

Quote

The Law about Dual citizens is to be changed in 2021, i.e. in not more than a year's time. Can Basil become an MP or Minister without there being an Election before the Law is changed? Even if we assume that he can become an MP/Minister before that, can he continue in that position AFTER the Law is changed?
Mr.Musharraf, your justification doesn't seem to hold water. Think again.

Unquote

Post a Comment