Header Ads



வெலிகம Marriot ஹோட்டலின், செயற்பாடுகள் இடைநிறுத்தம்


கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள, மினுவாங்கொட பிர​ன்டிக்ஸ் நிறுவனத்தின் முகாமையாளர் இந்த மாதம் 3,4ஆம் திகதிகளில்  வெலிகமையிலுள்ள Marriot  ஹோட்டலுக்குச் சென்று வந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் ​தொடர்பில், வெலிகம நகர சபையின் தவிசாளர் ரெஹான் ஜயவிக்ரம தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த ஹோட்டலின் அனைத்து செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், இதன் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரெஹான் ஜயவிக்ரம பதிவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.