Header Ads



சீனத் தூதுக்குழு இலங்கைக்கு வந்தபோது, JVP ஏன் போராடவில்லை...? மங்கள கேள்வி


அமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கைக்கு வரும்போது எதிர்ப்பை வெளியிட்டுள்ள ஜேவிபி, ஏன் சீனத் தூதுக்குழு இலங்கைக்கு வந்தபோது எதிர்ப்பை வெளிக்காட்டவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இந்தக்கேள்வியை எழுப்பியுள்ளார். மைக் பொம்பியோ நேற்று மாலை இலங்கையை வந்தடைந்தார்.

இந்தநிலையில் ஜேவிபி நேற்று பகல் கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்க தூதரத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

இலங்கைக்கு வரும் அமெரிக்க இராஜாங்க செயலாளர், அமெரிக்காவின் நலன்களை பாதுகாக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்துடன் உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவுள்ளார் என்று இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்தநிலையில் இவ்வாறான இந்த ஆர்ப்பாட்டத்தை ஏன் சீனாவின் கம்யூனிஸ் கட்சியின் அரசியல் உறுப்பினர் யாங் ஜெய்சி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்தபோது ஜேவிபி மேற்கொள்ளவில்லை என்று மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார்.

அவ்வாறு சீனத் தூதுக்குழுவின் வருகைக்கு எதிராகவும் ஜேவிபி ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்குமானால் அந்தக்கட்சியின் இலங்கையின் இறைமை தொடர்பான அக்கறைக்கு மதிப்பளித்திருக்கமுடியும் என்று மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளர்

1 comment:

Powered by Blogger.