Header Ads



கொரோனா சமூகதொற்றை கட்டுப்படுத்தாவிட்டால், அதிகளவு உயிரிழப்பு ஏற்படலாம் - GMOA


இலங்கை சமூகத்தொற்று ஆபத்தினை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ள அரசமருத்துவஅதிகாரிகள் சங்கம் அரசாங்கம் இதனை அலட்சியப்படுத்தினால் உயிரிழப்புகள் அதிகரிப்பதுடன் பாரதூரமான விளைவுகள் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.


நாட்டில் மிகவும் ஆபத்தான நிலைமை உருவாகிவருகின்றது சமூகதொற்றினை தடுப்பதற்காக தற்போதைய நிலைமையை எவ்வாறு கையாளப்போகின்றோம் என்பதே நாங்கள் தற்போது எதிர்கொண்டுள்ள சவால் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வைத்தியர் ஹரித்த அளுத்கே தெரிவித்துள்ளார்.


ஒருசிலநாட்களுக்குள் இலங்கை மூன்று உயிரிழப்புகளை சந்தித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர் சமூகபரவலை தடுக்காவிட்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாங்கள் சரியான தீர்மானங்களை எடுக்காவிட்டால் அடுத்த ஒரிருமாதங்களில் வழமைக்கு மாறான அதிகளவு உயிரிழப்புகளை நாடு சந்திக்கவேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.