Header Ads



தனித்துவ கட்சி உருவாக்கப்பட்டதன் நோக்கமும், அதன் தற்போதைய நிலையும்..!!


- Dr. Yoonus Lebbe Anpudeen -

மறைந்த தலைவர் MHM ASHRAF அவர்கள் 1986 ஆம் ஆண்டு தனித்துவக் கட்சியான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை இறைவனின் உதவியோடு உருவாக்கி 1988ம் ஆண்டு தேர்தல் ஆணையம் சட்டரீதியாக அங்கீகாரம் வழங்கியதன் பின்னர் அதே ஆண்டு முதன் முதலாக வடகிழக்கிற்கு வெளியே நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு அதன் பின்னர் மீண்டும் அதே ஆண்டில் வடகிழக்கில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலிலும், அதன் பிற்பாடு 1989, 1994ம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, கட்சியை வடகிழக்கிலும் வடகிழக்கிற்கு வெளியேயும் பரந்த அளவில் குறுகிய காலத்தில் வளர்ச்சி அடையச் செய்து, மாற்று சமூகத்தின் மத்தியிலும் நமது சமதுகத்திற்கு ஒரு நல்ல பெயரையும் உருவாக்கி, சர்வதேச மட்டத்தில் இந்த நாட்டின் சனத்தொகையில் கிட்டத்தட்ட 10% மக்கள் முஸ்லிம்கள் என்று உறுதிப்படுத்தி, 2000ம் ஆண்டு மற்றும் ஒரு பொதுத் தேர்தலை சந்திக்கும் போது எதிர் பாராத விதத்தில் அன்றைய தலைவர் அகால மரணமடைந்ததைத் தொடர்ந்து வந்த தலைமைத் துவங்கள் சுயநல அரசியலுக்காக பின் விளைவுகளை அறியாமல் அல்லது அறிந்தும் பொருட் படுத்தாமல் நடந்து கொண்டதன் விளைவுதான் இன்று நமது சமூகம் அனுபவித்துக் கொண்டு இருக்கும் அனைத்து துன்பங்களும். 

தலைவர் MHM ASHRAF இன் மறணத்தின் பின்னர் உருவான இரட்டைத் தலைமைத்துவங்கள் சமூகத்தையும் தனித்துவக் கட்சி உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையும் மறந்து பதவிகளுக்காகவும் வேறு தனிப்பட்ட நோக்கங்களுக்காகவும் ஒருவர் மீது ஒருவர் உருவாக்கிய அழுத்தங்களையும் மாற்றுக் கருத்துக்களையும் அன்று இருந்த நாட்டின் தலைமைத்துவம் அதனை அவர்களுக்கு சாதகமாக மாற்றி முதன் முதலாக நமது சமூகத்திற்க்காக உருவாக்கப் பட்ட தனித்துவக் கட்சியின் கொள்கையில் சரிவை ஏற்படுத்தினார்கள். அதன் பின்னர் இரட்டைத் தலைமைத்துவம் இரண்டாக பிளவு அடைந்து ஒன்றிணைந்த பலத்தை  பலவீனமடையச் செய்தார்கள். 

அதன் பின்னரும் தவறை உணராமல் சமூகம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை தான் ஆயுள் கால தலைவனாகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்தால் போதும் என்று எண்ணி, தான் பாராளுமன்ற உறுப்பினராக வரவேண்டும் என்றால் ஐக்கிய தேசியக் கட்சியினூடாக மட்டும் தான் முடியும் என்பதற்காக தொடர்ச்சியாக அதற்குள் சிக்குண்டு பலம் பொருந்திய கட்சியை பல கட்சிகளாக பிளவடயச் செய்து பலவீனப் படுத்தியது மட்டும் அல்லாமல் வீர வசனங்கள் பேசி பெரும் சமூகத்திற்கு எதிராக நமது சமூகத்தை திசை திருப்பியதன் விளைவுதான் நமக்கு எதிரான இன்றைய அழுத்தங்கள்.

பிரிந்து சென்று உருவான தலைமைத்துவங்களும் உரிய பாதையில் பயணிக்காததன் விளைவு ஒட்டுமொத்த எமது சமூகமும் இந்த நாட்டிற்கு எதிரானவர்கள் என்ற நிலைப்பாட்டை தோற்றுவித்து இருக்கின்றன.  

தலைவர்களும், ஏனைய அரசியல் வாதிகளும் மட்டும் இவைகளுக்கு பொறுப்பு அல்ல மக்களும் பொறுப்பு கூறவேண்டும். மீண்டும் மீண்டும் தகுதியற்றவர்களை தலைவனாகவும், பிரதிநிதிகளாகவும் அங்கீகரிக்கின்ற போது இவ்வாறான விளைவுகளை சந்திக்க நேரிடும். அன்று இரட்டைத் தலைமைத்துவத்தில் ஒருவரின் கரத்தைப் பலப்படுத்த மற்றவர் அவமானப் படுத்தப் பட்டார், சில ஆண்டுகள் கழித்து எந்த மக்கள் SLMC இன் தலைமைத்துவம் தற்போது உள்ள தலைவருக்கு மட்டும் கிடைக்க காரணமாக இருந்தார்களோ அதே மக்களால் அதே தலைவர் அதேமண்ணில் மிகவும் மோசமான முறையில் அவமானப் படுத்தப் பட்டார். மக்களின் கடமை அவமானப் படுத்துவது அல்ல, தகுதியானவர்களை உருவாக்குவதும், தகுதி அற்றவர்களை தேர்தலில் நிராகரிப்பதும்தான்.

இன்று நடைபெறுகின்ற அரசியல் பழிவாங்கல்கள் அன்று நமது தலமைகள் சிந்திக்காமல் எடுத்த முடிவுகளின் விளைவுகள்தான். தோற்பவர்கள் தொடர்ச்சியாக தோற்ப்பதும் இல்லை, வெற்றி பெற்றவர்கள் தொடர்ச்சியாக வெற்றி பெறுவதும் இல்லை. அதேபோன்று சிறுபான்மை சமூகமான நாங்கள் தொடர்ச்சியாக ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கவும் முடியாது. ஆகவே எங்களுடைய சிந்தனைகளும் தீர்மானங்களும் எவ்வாறான சூழ்நிலை வந்தாலும் எமது சமூகத்திற்கு பாதிப்பு இல்லாதவாறு அமையவேண்டும். சமூகத்திற்கு முன்னுரிமை வழங்குபவர்களிடம் நல்ல சிந்தனையையும் முடிவுகளையும் எதிர்பார்க்கலாம் ஆனால் சுயநல அரசியல் செய்பவர்களிடம் இவைகளை எதிர்பார்க்க முடியாது.

மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்காமல், சுயநல அரசியல் வாதிகளின் முடிவுகளுக்கு பின்னால் சென்றால் நமது இழப்புகளையும் நம்மீது பிரயோகிக்கப் படுகின்றன அழுத்தங்களையும் தவிர்க்க முடியாது. 

இனிமேலும் அரசியல் வாதிகளும் மக்களும் தமது தவறுகளை சரி செய்யாவிட்டால், தனித்துவ அரசியல் என்பதை மறந்து அன்று போல் தேசிய அரசியலில் கலந்தால் நம்மீது உள்ள அழுத்தங்களையும் பாதிப்புகளையும் ஓரளவு குறைக்க முடியும். எதிர்காலத்தில் எது சரி எது பிழை என்று சிந்தித்து செயல் படுங்கள்.

2 comments:

  1. World is changing and now we have parliamentary system. Before the parliamentary system there was a king ruled the country. There in no doubt Late Asian did a different political system. I think it was suite any more and it wast of time still taking about it.

    ReplyDelete

Powered by Blogger.