Header Ads



நாணயத்தாள்களில் கொரோனாவா..? அவதானமாக செயற்பட வலியுறுத்து


நாட்டில் 18 பொலிஸ் அதிகார பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று அவதான நிலைமை காணப்படுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 


மேலும் பண பரிவர்த்தனையின் போது கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவும் அவதானம் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். 


இதன் காரணமாக பண பரிவர்த்தனையின் போது மிகவும் கவனமாக செயற்படுமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


இதேவேளை, கொரோனா தொற்று தனக்கு ஏற்பட்டுள்ளது என சந்தேகம் இருந்தால் அது தொடர்பில் அச்சம் கொள்ளாமல் உடனடியாக சுகாதார பிரிவினருக்கு அறிவிக்குமாறு கொரோனா வைரஸ் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார். 


சுகாதாரப் பிரிவினரால் பெற்று கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் உரிய முறையில் பின்பற்றப்படாமை காரணமாக நாட்டினுள் மீண்டும் கொரோனா பரவ ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. காசோடும் காற்றோடும் கலந்திருக்கும் கொரோணாவுடன் சேர்ந்து வாழப் பழகிக்கொள்ள வேண்டும். 

    சுடு நீர் அருந்துவதும், நீராவியை மூக்கு வாய் கொண்டு உள்ளிழுத்து வெளி விடுவதும், கைகளை சுத்தமாக வைத்திருப்பதுவும் இதற்கான எளிய வழியாகும்!

    ReplyDelete
  2. தனிமைப்படுத்தல் மற்றும் எரியூட்டல் போன்றவற்றால் மேற்கொள்ளப்படும் கெடுபிடிகள் மக்களின் மனோநிலைகளைக் கவனத்திற்கொண்டு மறுபரிசீலிக்கப்பட்டால் நிலைமை இலகுவாகலாம்?

    ReplyDelete
  3. கொரோனா எனும் பெயரில் மீடியாக்கள் ஊதிப் பெருப்பித்து அகோரமாகக் காட்டுவது நிறுத்தப்பட்டால், மக்கள் அநியாயமாக உளவியல் பாதிப்புக்குள்ளாகி நோய்வாய்ப்படுவதும் உயிரிழப்பதும் பெருமளவு குறைந்துவிடும்?

    ReplyDelete
  4. Digital currency க்கான திட்டம்

    ReplyDelete

Powered by Blogger.