Header Ads



முஸ்லிம் தலைமைகளின், காலம் கடந்த அரசியல் ஞானம்


- சட்டத்தரணி பஸ்லின் வாஹிட் -

கடந்த பாராளுமன்றத் தேர்தலிலே சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கியமக்கள் சக்தி கூட்டணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பல மாவட்டங்களிலும் போட்டியிட்டன. அந்தத் தேர்தலில் சஜித் தலைமையிலான கூட்டணி தோல்வி அடையும் என்று தெரிந்திருந்தும் தமது கட்சி சார்பாக அதிகளவான உறுப்பினர்களை வெற்றியடையச் செய்ய வேண்டுமென்ற குறுகிய நோக்கில் முஸ்லிம் கட்சிகள் மட்டுமல்லாது சில தமிழ் கட்சிகளும் போட்டியிட்டன .ஆனால் சிறுபான்மை முஸ்லிம் கட்சிகள் எதிர்ப்பார்த்த பிரதிநிதிகள் கிடைக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் தேசியப்பட்டியல் மூலம் கட்சிகளுக்கு வழங்குவதாக உறுதி அளித்திருந்த பிரதிநிதித்துவங்கள் கூட கிடைக்கவில்லை. 

இது தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் நுழையலாம் என காத்திருந்தவர்களுக்கு இலவுகாத்த கிளி போன்ற கதையாகிவிட்டது. சஜித்தின் இந்த துரோகத்திற்கு பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்று காத்திருந்த முஸ்லிம் கட்சி உறுப்பினர்களுக்கு கிடைத்த சந்தர்ப்பம் தான் இருபதாவது திருத்தம். தலைவர்கள் இருவரும் எதிர்த்து வாக்களித்தாலும் அவர்களது கட்சியின் உறுப்பினர்கள் ஆறு பேர் ஆதரவாக வாக்களித்து தாம் அரசுடன் சேரத் தயார் என்ற சமிக்ஞையை மறைமுகமாக விடுத்துள்ளனர்.அதனால் திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும் என்று காத்திருந்த எதிர்க்கட்சிக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.

இன்றைய நிலையில் அரசுக்கு ஆதரவளிப்பவர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சுப் பதவி வழங்க முடியாது.எனவே தமது கட்சி உறுப்பினர்களை ஆதரவு அளிக்க சம்மதம் அளித்து விட்டு தலைவர்கள் எதிர்த்து இருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகின்றது.ஏனெனில் ஆதரவு அளித்தாலும் அமைச்சரவைக்கு போகும் நிலை தற்போது இல்லை.

இனிவரும் காலங்களில் மேலும் பல மாற்றங்கள் அரசியலில்  நிகழலாம்.ஒரு தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான அடித்தாளமாகவும் இது இருக்கலாம்.அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிக்க வேறு எந்த வழியும் இல்லை.புதிய அரசியலமைப்பு உடனடியாக  வருவதற்கும் சாத்தியங்கள் தென்படவில்லை.தேசிய அரசாங்கம் அமையுமிடத்து மீண்டும் பதவி மோகத்தில் தலைமைகளும் சங்கமிக்கத்தான் செய்யும்.எது எப்படி இருப்பினும் அரசுக்கான முஸ்லிம் கட்சிகளின் ஆதரவானது காலம் கடந்த ஞானமே.வரப் போகும் மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளும் சமூகமும் என்ன செய்யப் போகின்றது என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.


5 comments:

  1. The SBJ should be happy that these Muslim MP's of the SLMC and ACMC, an MP of the SBJ (female) and an MP of the joint ACMC - SLMC front and a Tamil MP of the TPA had helped parliament yeaterday to "SAVE" Sri Lankan from the "TREACHERY" created by the Ranil-Maithripala" Yahapalan government 19th., amendment. "The Muslim Voice" wishes to thank these Muslim MP's for supporting the 20th., amendment and for voting in favour of the bill. But "The Muslim Voice" wishes to "WARN" PM Mahinda Rajapaksa, President Gotabaya Rajapaksa and former Minister Basil Rajapaksa to be very "VIGILANT" regarding the political maneuvers that the ACMC, SLMC and thes Muslim MP's will make to gain personal and selfish gains for themselves and their kith and kin and "HENCHAIYAS" by holding to ransom the government for supporting the 20th., amend in parliament. IF THEIR REQUESTS ARE COMMUNITY FOCUSSED AND CAN BENEFIT THE PROGRESS AND DEVELOPMENT OF THE MUSLIM COMMUNITY AT LARGE WITHIN THE NORMS OF POLITICAL ADMINISTRATION ON A EQUAL FOOTING WITHOUT OVERIDING THE OTHER COMMUNITIES, DEFENITELY THE GOVERNMENT SHOULD CONSIDER THEM POSITIVELY.
    These Muslim MP's who have now "creeped" into government power centers through just casting a vote of "YEA" in parliament in support of the 20th., amendment may try to "OVERRIDE" the 3 Muslim National List MP's of the SLPP and Hon. Attahulla and veild there political muscle to politically manipulate their way to "RECOGNIZTION" in the government power circles. THE SLPP, HE. GOTABAYA RAJAPAKSA, PM MAHINDA RAJAPAKSA AND FORMER MINISTER BASIL RAJAPAKSA SHOULD BE VERY ALERT ABOUT, ESPECIALLY THESE MUSLIM MP's, THOUGH THEIR SUPPORT WAS MEANING FULL, BUT HON. ALI SABRY, HON. MARJAN FALEEL, HON. MUZAMMIL AND HON. ATTAULLAH SHOULD BE RECOGNIZED AS THE "MUSLIM PILLAR MP,s" OF THE GOVERNMENT IN ALL MATTERS, BOTH POLITICAL AND ADMINISTRATION PERTAINING TO THE SRI LANKA MUSLIM COMMUNITY.
    Noor Nizam - Peace and Politcal Activist, Political Researcher, SLFP/SLPP Stalwart and Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. ONLY Allah knows what is correct and what is wrong...

    ReplyDelete
  3. Noor Nizam

    You have named the "MUSLIM PILLAR MPS". What about the other pillars, like the so-called "Muslim Noice"?

    You claim to be a 'Stalwart' of the SLFP. Do you have anything to say about the SLFP President, Maithripala Sirisena Not Voting for 20A? Being a 'Stalwart' of the SLFP, What action are you going to take against Maithripala Sirisena for setting the Bad Example of keeping away at the Voting time?

    ReplyDelete
  4. Muhandriram,
    ஒரு முட்டாள் போல கருத்துகளை கூற வேண்டாம். விவேகமான மற்றும் ஆழமான அரசியல் பகுப்பாய்வு கொண்ட கருத்துகளை எழுதுங்கள்.
    முஸ்லீம் குரல் முஸ்லீம் வாக்களிப்பு வங்கியை ஒரு நன்மை பயக்கும் வகையில் வழிநடத்தும் விவேகமான கருத்துக்களை வழங்குகிறது. "முஸ்லீம் குரல்" அளித்த கருத்துக்களை SLFP / SLPP தலைவர்களும் கருதுகின்றனர். "முஸ்லீம் குரல்" இதுவரை எழுதியது, ஆழமான அரசியல் உண்மையை வெளிப்படுத்தியுள்ளது, இன்ஷா அல்லாஹ்.
    Noor Nizam - Peace and Politcal Activist, Political Researcher, SLFP/SLPP Stalwart and Convener "The Muslim Voice".

    ReplyDelete
  5. Muhandiram,
    Do not make comments like an idiot. Write comments that are sensible and with deep political analysis.
    The Muslim Voice contributes sensible comments that can guide the Muslim Vote bank in an advantag0us manner. The comments made by "The Muslim Voice" is also considered by the SLFP/SLPP leaders. What ever "The Muslim Voice" has written upto now, has radiated deep political truth, Insha Allah.

    ReplyDelete

Powered by Blogger.