Header Ads



கட்டாரில் இலங்கையர்களின் தொடர் மரணங்களும், குர்ஆனிய வசனத்தின் யதார்த்தமும்..!!


وما تدري نفس بأي أرض تموت

எந்தவொரு ஆத்மாவும் தனக்கு எப்பூமியில் மரணம் சம்பவிக்கும் என்பதை அறியாது.

(சூரா லுக்மான் 34 வது வசனம்)


அன்பான உறவுகளே!!! வாழ்ந்த காலத்தை மீட்டிப் பார்த்து வாழப்போகும் ஒவ்வொரு நிமிடத்தையும் அழகுபடுத்திக்கொள்ள முயற்சி செய்வோம்.

👉 இரத்த உறவுகளைப் பேணி வாழ்வோம்


👉 அடுத்தவர்களை மன்னிப்போம், விட்டுக்கொடுப்போம்.


👉 பொறாமை, குரோதம், நயவஞ்சகம், கோபம், பகைமை, கோள்மூட்டுதல், புறம் பேசுதல், அவதூறு பரப்புதல் போன்ற நரகில் எரிக்கும் கொடிய பாவங்கள் தவிர்ப்போம்.


👉 அந்தரங்க வாழ்வை அல்லாஹ் ஒருவன் பார்க்கிறான் என்ற பயத்தை மனதிற்கொண்டு அழகுபடுத்திக்கொள்வோம்.

"நிச்சயமாக உம் இரட்சகனின் பிடி மிகக் கடுமையானது" (சூரதுல் புரூஜ்)


👉 தொழுகைகளை உரிய நேரத்திற்கு நிறைவேற்றுவோம்.

"நிச்சயமாகத் தொழுகை முஃமின்களுக்கு நேரம் குறிக்கப்பட்ட கடமையாகும்" (சூரா நிஸா 103)


👉 அல்லாஹ் தந்தவற்றைக் கொண்டு மரணம் வருவதற்கு முன்னர் அழகிய வழிகளில் செலவளிப்போம்.

அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து மரணம் வருவதற்கு முன்னர் செலவழியுங்கள். (சூரதுல் முனாபிகூன் 10)


👉 ஒவ்வொரு சிறிய நன்மையான காரியத்தையும் அற்பமாகக் கருதாமல் செய்ய நினைத்த உடனே செய்துவிடுவோம்.


👉 அதிகமாகப் பாவ மன்னிப்புத் தேடுவோம்.

உம் இரடசகனிடத்தில் பாவ மன்னிப்புத் தேடுவீராக.. நிச்யமாக அவன் மிக்க மன்னிப்பவனாக இருக்கிறான். (சூரா நூஹ் 10)


👉 அல்லாஹ்வுக்கும், அடியார்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை அழகிய முறையில் நிறைவேற்றுவோம்.


👉 ஒவ்வொரு கனமும் மலக்குல்மௌத் என் அருகில் உள்ளார் என்ற சிந்தனையோடு வாழ்வோம்.


இது என்னுடைய மற்றும் உங்களுடைய சிந்தனைக்காகவும் நடைமுறைக்காவும் பகிர்கிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரது பாவங்களையும் மன்னித்து மறைத்து, அவன் அழைப்பை ஏற்றிருக்கும் அனைவரது பாவங்களையும் மன்னித்து, மண்ணறை வாழ்வை பிரகாசிக்கச்செய்து உயர்ந்த சுவனமாகிய ஜன்னதுல் பிர்தௌஸில் உயர்ந்த அந்தஸ்த்துக்களை அனைவருக்கும் தந்தருள்வானாக🤲🤲🤲🤲

ஆமீன் யாரப்பல் ஆலமீன்.


Asheikh Hafiz Safran bin Jahufar

அஷ்ஷெய்க் அல் ஹாபிழ் ஸப்ரான் பின் ஜஃபர்

டோஹா கட்டார்

05-10-2020


3 comments:

  1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:

    “எவ்வாறு இரும்பு துருப்பிடிக்கிறதோ அதேபோல உள்ளங்களும் துருப் பிடிக்கின்றன” என்று சொன்னபோது -

    “உள்ளத்திலே படியக்கூடிய துருவைப் போக்க என்ன செய்யலாம் அல்லாஹ்வின் தூதரே?” என ஸஹாபாக்கள் கேட்டார்கள்.

    அதற்கு நபியவர்கள் கூறினார்கள் -

    “இரண்டு வழிகள் இருக்கின்றன:

    ஒன்று அல்குர்ஆனை ஓதுவது (திலாவதுல் குர்ஆன்).

    இரண்டாவது மரணத்தை நினைவுபடுத்துவது (திக்ருல் மௌத்)”

    ReplyDelete
  2. May Allah bless the writer for this reminding...

    ReplyDelete

Powered by Blogger.