Header Ads



நாடு முழுவதும் முடக்கப்படாது, கொரோனா உள்ள பகுதிகளில் மாத்திரம் ஊரடங்கு


ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள சதொச மற்றும் சிறப்பு அங்காடிகளின் ஊடாக பொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

90 ஆயிரம் மெட்றிக் தொன் கிலோ கிராமுக்கும் அதிகளவான சீனி நாட்டிலுள்ள களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தடைகள் எதுவும் இல்லை.

எனவே, ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் சதொச மற்றும் சிறப்பு அங்காடிகளின் ஊடாக பொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எனவே, பொதுமக்கள் அவசியமற்ற வகையில் பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்கான தேவை இல்லை.

நாடு முழுவதையும் முடக்குவதற்கான தீர்மானத்தை அரசாங்கம் இதுவரையில் மேற்கொள்ளவில்லை.

கொரோனா தொற்று உறுதியானவர்கள் அடையாளம் காணப்படுகின்ற பகுதிகளில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை அமுல்ப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. நாடு முழுவதும் ஒரு போதும் முடக்கப்படமாட்டாது. கொறொனா உள்ள பகுதியைத் தவிர ஆனால் நாடு முழுவதும் கொரோனா பரந்துள்ளது 😭

    ReplyDelete

Powered by Blogger.