Header Ads



பசில் அணியை வலுப்படுத்துவதே மாற்று வழி - கலாநிதி நிர்மால் ரஞ்சித்


நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் நிலைமையில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தரப்பை வலுப்படுத்துவதே சிறந்த மாற்று வழியாக இருக்கும் என கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ச தரப்பை வலுப்படுத்த தாம் நிபந்தனையின்றி குரல் கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் தேவசிறி இதனை கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

நாம் விரும்புவது நாம் விரும்பியதை போலவே நடக்காது. அரசியல் என்பது அலையுடன் சேர்ந்து நீந்துவது அல்ல.

அலையுடன் நீந்தி பாதுகாப்பாக ஆற்றை கடப்பதே அரசியல். தற்போதைய அரசியல் நிலைமையில் அரசாங்கத்தின் பசில் அணியை வலுப்படுத்துவதற்காக நான் நிபந்தனையின்றி குரல் கொடுப்பேன்.

சிங்கள - பௌத்தம் அல்லாத மக்களுக்கு நிவாரணத்துடன் கூடிய சந்தர்ப்பம் தேவை என்றால், பசில் அணியை வலுப்படுத்துவதன் மூலமே அதனை செயற்பாட்டு ரீதியாக செய்ய முடியும்.

அத்துடன் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை வைத்திருக்க வேண்டும் என எண்ணும் நபர்களுக்கு பசில் அணியை வலுப்படுத்துவதே மாற்றுவழி எனவும் நிர்மால் ரஞ்சித் தேவசிறி குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி அவர்களே. நீங்கள் ஒழுங்காக பத்திரிகை படிப்பதில்ல்லையா? 13 திருத்த சட்டத்தை பார்த்துகொள்ள நாம் இருக்கிறோம் இந்தியா இருக்கிறது. ரஜபக்ச குடும்ப சண்டைக்குள் எம்மை இழுத்து விடவேண்டாம். 13வது திருத்தம் அட்சரம் பிசகாமல் புதிய அரசமைப்பில் இடம் பெறும். அல்லது புதிய இலங்கை இந்திய ஒப்பந்தம் மீண்டும் கொழும்பில் கையொப்பமாகும். கலாநிதி நிர்மால் தேவசிறி அவர்களே 13 திருத்தச் சட்டத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்களும் உங்கக் ஆக்களும் சேர்ந்து மகாவம்ச காலத்தில் இருந்தே புகழ் பெற்ற
    அண்ணன் தம்பி பிரச்சினையில் பசிலை பலப்படுத்துங்கள்.

    ReplyDelete
  2. பதின்மூன்றவது பக்கச்சாற்பற்றிருக்குமானால் நாங்களும் முழு ஆதரவு கொடுக்கத்தயார். ஆனால் அது இருப்பதாகத் தெரியவில்லை இல்லையா? ஆகவே நேர்மயாக்குவதில் முதற்கவனம் செலுத்தப்படவேண்டும் அடுத்து இந்தியாவா அல்லது இலங்கையா என்று விவாதிக்கலாம்.

    ReplyDelete
  3. மகாணசபை தமிழர் போராட்டத்தால் 13 சீர்திருத்தத்தின் அரைகுறை அமூலாக்கத்தினால் இந்திய அழுத்தத்தால் கிடைத்த வரப்பிரசாதம்தானே. கிழக்கில் ஒரு சுழற்ச்சிமுறை அதிகாரப்பகிர்வு ஏற்பட்டு தமிழ் முஸ்லிம் உறவு வலுப்படால் நாம் மேலும் பலம்பெறுவோம். எதிர்காலத்தில் மாகாணசபை அதிகாரங்கள் உயரும். வடகிழக்கு மாகாணசபைகள் இணைவோ பிரிவோ எதுவும் நிகழலாம். எதுநிகழ்ந்தாலும் தமிழர் மற்றும் முஸ்லிம்களிடை சுழற்ச்சி முறை அதிகாரப் பகிர்வுக்காக போராடுவேன்.

    ReplyDelete
  4. இலங்கையில் பிரிவினைவாதத்தை வளர்க்க ஆசியாவின் அசிங்கம் கேவலம் கெட்ட இந்தியாவால் திணிக்கப்பட்ட 13 ஆம் திருத்தம் இந்த நாட்டிற்கு தேவையற்றது. முக்கியமாக கிழக்கிற்கு 13 தேவையில்லை. 13 தேவையா இல்லையா என்பதை தீர்மானிக்க இலங்கையில் பொதுவாக்கெடுப்பு அவசியம்

    ReplyDelete
  5. 13வது திருத்தச் சட்டம் இலங்கைக்கு மிக அத்தியாவசியமானது. இதனைத் தடுக்க எவராலும் முடியாது. ஆயினும் வடக்கும் கிழக்கும் இப்போது இருக்கினறவிதமாகவே இருக்க வேண்டும். பசில் பலமாக்கப்பட வேண்|டும் என் கலாநிதி அவரகள் கூறுவது இப்படிப் பேசினால் தனக்கும் "ஏதாவது" கிடைக்கும் என்ற நப்பாசையில்த்தான். கிடைக்கட்டும் கிழக்கிற்கு அதனால துக்கம் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.