Header Ads



அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாக இருந்தவரே முஹம்மத் நபி அவர்கள் - சஜித்


இஸ்லாமியர்கள் பெறும் கொளரவத்துடன்  நபிகள் நாயகத்தின் பிறப்பினை கொண்டாடும் இன்றைய தினம் உலகில் வாழும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம் .

63 வருடங்கள் வாழ்ந்து பாரிய சமூக மற்றும் சமய பணிகளை மேட்கொண்டதோடு இஸ்லாமிய சன்மார்க்கம் உருவாகுவதற்கு முன்னோடியாகவும் இருந்தார்.

" கூறுவீராக,நீர் அல்லாஹ் மீது அன்பு காட்டுபவர்களாயின் எனது (நபிகளின் ) மார்க்கத்தை பின்பற்றுங்கள்.அப்போது அல்லாஹ் உங்கள் மீது அன்பு காட்டுவதுடன் உங்கள் பாவங்களை மன்னிக்கிறான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவன். பெரும்தயாளனும் ஆவான்."

( 3: 31  வசனம் அல்குர்ஆன்)

இதன்படி நபிகளாரின் பிறந்த தினம் இஸ்லாமியர்களின் விஷேட தினமாக உலகவாழ் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.

அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாக இருந்த முஹம்மத் நபி(ஸல்)அவர்கள் தம்மை பின்பற்றுவோறுக்கு  அன்பு மற்றும் கருணை என்பவற்றின் முக்கியத்துவத்தை கற்பித்ததுடன், சமூகத்தில் உள்ளோர் இல்லார் இடைவெளியை இல்லாமல் ஆக்கவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.

இதனை பின்பற்றும் இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கு அள்ளிக்கொடுத்தும்,பகிர்ந்து விருந்தளித்தும் இத்தினத்தை கொண்டாடுகின்றார்கள். உலகில் பல்வேறு நாடுகளில் நபிகளின் பிறந்த தினம் கொண்டாடப்படுவதுடன் இலங்கையிலும் அதற்கான பல நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

எவ்வாறெனிலும் நிலவும் கொரோனா அபாய நிலை இந்த சிறப்பு மிகு தினத்தில் சமய மற்றும் சமூக நடவடிக்கைகளில் கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும் ஏனைய தினங்களை விட விமர்சியாகவும் முன்மாதிரியாகவும் இந்தப் புனித நாளை கழிப்பதற்கு உறுதி பூண இஸ்லாமியர்களை கேட்டுகொள்கிறோம். 

அனைத்து உயிர்கள் மீதும் கருணை காட்டும் நபிகளாரின் கொள்கை அனைவரதும் அன்றாட வாழ்வில்  வழிகாட்டியாக இருக்கட்டும்.

சஜித் பிரேமதாஸ

எதிர்க்கட்சித்தலைவர் 

தலைவர் -ஐக்கிய மக்கள் சக்தி.

2 comments:

Powered by Blogger.