Header Ads



இலங்கைக்கு விரைவில் கிடைக்கவுள்ள, கொரோனா தடுப்பூசி மருந்து


இலங்கைக்கு விரைவில் கொரோனா வைரஸிற்கு பயன்படுத்தும் தடுப்பூசி கொண்டு வரப்படும் என தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

சீனா, பிரித்தானியா ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவினால் பரீட்சித்து பார்க்கப்படும் கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் அனுமதி வழங்கியவுடன் உடனடியாக இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

உலகில் 10 நாடுகள் இதுவரையில் தடுப்பூசி தயாரிக்கும் நோக்கில் ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும் சீனா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா தயாரித்துள்ள தடுப்பூசிகள் உரிய மட்டத்திற்கு மேல் உள்ளதாக தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் அசித டி சில்வா தெரிவித்துள்ளார்.

அந்த தடுப்பூசிகளுக்குள் சீனா மற்றும் பிரித்தானியா தயாரிக்கும் தடுப்பூசி வெகு விரைவில் இலங்கைக்கு கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, உலக சுகாதார அமைப்பின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ள சீனாவின் கொரோனா தடுப்பூசியை பரீட்சித்து பார்ப்பதற்க 60 ஆயிரம் பேர் தன்னார்வமாக முன் வந்துள்ளனர். அந்த நபர்கள் 10 நாடுகளை சேர்ந்த 125 இனத்தை சேர்ந்தவர்கள் என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

மூன்றாம் கட்ட தடுப்பூசி சோதனையில் எவருக்கும் மிகப்பெரிய உபாதைகள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.