Header Ads



கல்முனை மாநகர சபையே, இது உங்களின் கவனத்திற்கு..!


அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கிறீன் பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டம் மற்றும் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பின்பகுதியில் உள்ள வெட்டுவாய்க்கால் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுவதனால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.


குறித்த சீர்கேட்டினால் தினமும் நுளம்பின் பெருக்கம் ஏற்படுவதுடன் துர்நாற்றமும் வீசுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.


இவ்விடயம் தொடர்பாக கல்முனை மாநகர சபை கவனயீனமாக செயற்படுவதாகவும் தற்போது டெங்கு அச்சுறுத்தலினால்  3 வயது குழந்தை ஒன்று இப்பகுதியில் இனங்காணப்பட்டுள்ளது.


சுமார் 2ஆயிரம் மக்கள் வசிக்கின்ற இவ்வீட்டுத்திட்டத்திற்கு அருகில் உள்ள குறித்த வெட்டுவாய்க்காலை  துப்பரவு செய்து தந்துதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.


பாறுக் ஷிஹான்


2 comments:

  1. இது கல்முனை மாநகர சபைக்குரியதல்ல இது நீர்பாசன திணைக்களத்துக்குரிய வாவிதான் இது இதனை சுத்தப்படுத்த வேண்டிய பாதிய பொறுப்பு அவர்களுக்குரியது

    ReplyDelete
  2. குப்பை கொட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்

    இப்படிக்கு
    கொளரவ மேயர்
    😆

    ReplyDelete

Powered by Blogger.