Header Ads



சுகாதார பாதுகாப்புகளை சஜித், கடைப்பிடிக்க வேண்டும் என கோரிக்கை


கொவிட் - 19 வைரஸ் தொற்றை தடுப்பதற்கான சுகாதார பாதுகாப்புகளை எதிர்க்கட்சி தலைவர் கடைப்பிடிக்க வேண்டும். 

இது எதிர்கட்சி தலைவருடைய பொறுப்பாகும். அதற்கு மாறாக கருத்து தெரிவிப்பதன் மூலம் நாடு தொடர்பாகவுள்ள பொறுப்பு தெளிவாகின்றது என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

கொவிட் - 19 தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டலை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவிப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்றைய தினம் எதிர்கட்சி தலைவர் எழுப்பிய கேள்வியை தொடர்ந்து சர்ச்சை ஏற்பட்டது. 

இதன்போது சுகாதார அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். தொற்றை தடுப்பதற்கான வர்த்தமானி அறிவிப்புக்கு பாராளுமன்றம் உட்படவில்லை என்று அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருப்பதாக அவரது உரையை மேற்கோள் காட்டி கேள்வியை எழுப்பினார். 

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச : பாராளுமன்றத்தினால் தயாரிக்கப்படும் சட்ட விதிகள் பாராளுமன்றத்திலேயே மீறப்படுகின்றன. சபை முதல்வரும் அமைச்சருமான தினேஸ் குணவர்தன மற்றும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் இதற்கு பதிலளித்தனர். இதன் போது சபையில் தொடச்சியாக வார்த்தை பிரயோகங்கள் இடம்பெற்றன. 

எதிர்கட்சி தலைவர்: பாராளுமன்ற அமைர்வு தொடர்பாக கட்சி தாலைவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் தற்போது நடைமுறைப;படுத்தப்படவில்லை. சட்டத்தை தயாரிக்கும் இடம் இந்த சபையாகும். இங்கே இந்த சட்டம் மீறப்படுகின்றது. சபைக்கு ஒரு சட்டம் நாட்டு மக்களுக்கு ஒரு சட்டமா?. 

அமைச்சர் தினேஸ் குணவர்தன: கட்சி தலைவர்களுக்கான கூட்டத்திற்கு அமைவாகவே பாராளுமன்றம் அமைகின்றது. உங்களின் பங்களிப்புடனேயே கட்சி தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைவாகவே சபை அமர்வு விவாதம் ஆரம்பமானது. 

எதிர்க்கட்சி தலைவர்: பாராளுமன்றம் இப்பொழுது கூட்டப்பட்டது. வர்த்தமானி அறிவித்தல் எப்போது வெளியிடப்பட்டுள்ளது. 

அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி: பொது இடம் எது என்பதை நாம் குறிப்பிட்டோம். பொது இடம் என்பதற்கான சரியான அர்த்தத்தை நாம் தெரிவித்துள்ளோம். 

பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்த கூற்றுக்கு சபாநாயகர் பதிலளிக்கையில் கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி இதற்கு பதிளிப்போம் என கூறினார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

No comments

Powered by Blogger.