Header Ads



சர்வதேச உலக, மனநல தினம்


(யு.எல்.அலி ஜமாயில் )

1922ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகில் தற்போது ஏற்பட்டுள்ள COVID 19 தாக்கம் காரணமாக பல மில்லியன் மக்கள் உளஆரோக்கியம் குறைந்தவர்களாக மாறியுள்ளார்கள். இதனைக் கருத்திற் கொண்டு 'அனனைவருக்கும் உள ஆரோக்கியம்' எனும் தொனிபபொருளில் மனநல தின நிகழ்வுகள் அனைத்து நாடுகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆரோக்கியம் என்பது நோய் நிலைகளிலிருந்து விடுபட்ட நிலை மட்டுமல்லாது ஒரு மனிதன் தனது உடல். உள, சமூக, ஆன்மீக நிலைகளில் அடையும் அதியுயர்ந்த நிலையாகும். ஆரோக்கியமாக இருப்பது ஒவ்வொருவரினதும் கட்டாய கடமையாகும்.

மனிதனின் உள ரீதியான பாதிப்பானது மூளையுடன் தொடர்புடையது. இது எல்லா மனிதர்களையும் பாதிக்கக்கூடியது. உளரீதியாகப் பாதிக்கப் பட்ட மனிதர்கள் சமூகத்திலிருந்து விடுபட்டு தனிமைப் படுத்தப் படுகிறார்கள். இதனால் இவர்களின் பாதிப்பு உச்சநிலையை அடைகின்றது.இன்னும் 15 ஆண்டுகளில் உளநோயானது உலகில் நோய்க்கான காரணிகளில் முதலாவதாக அமையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை, கொரோனா நோய் அனர்த்தம், வீட்டு வண்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள்; போன்ற பல்வேறு காரணங்களினால் 13% வீதமானன மக்கள் உளரீதியாகப் பாதிப்புக்கட்பட்டுள்ளார்கள். இவர்களில் 3%மான மக்கள் பாரிய தாக்கத்திற்குட்பட்டவர்கள் என புள்ளிவிபரவியல்களிலிருந்து அறியமுடிகிறது. இவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது குடும்பத்தினதும் சமூகத்தினதும் பாரிய பொறுப்பாகும்

உடல் ஊனமுறுவதைப் போல் உள்ளமும் பாதிப்படையும் நிலையைத்தான் மன நோய் என்று அழைக்கின்றோம். மனநோய் ஒருவரது கலாச்சார நம்பிக்கைகள் ஆளுமையுடன் கூடிய நடத்தைகள் மற்றும் சிந்தனைகள் உணர்வுகள் ஆகியவற்றை பாதிக்கக்கூடியதுடன் அவரது சொந்த வாழ்விலும் குடும்பத்திலும் எதிர்மறையான விளைவுகளைத் தோற்றுவிக்கின்றது. இது ஏழை, பணக்காரர், படித்தவர் படியாதவர்,உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பன பார்த்து ஏற்படுவதில்லை. உளப் பாதிப்பக்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் மருத்துவத் துறையினரால் முன்வைக்கப் படுகின்ற போதிலும் பின்வரும் காரணங்கள் பிரதானமானவை என கூறுப்படுகின்றது.

 பரம்பரை

 பிறப்பின் போது ஏற்படும் பாதிப்புக்கள்

 மூளையிலுள்ள இரசாயனப் பதார்த்தங்களின் மாற்றங்கள்.

 சூழல் தாக்கங்கள்

ஒருவர் உளப்பாதிக்கு உட்படும் போது அவரின் சிந்தனை உணர்ச்சிகள் மற்றும் கிரகிக்கும் சக்தி பாதிக்கப்பட்டு அவரின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

உள நோய்கள் பல வகையானது. ஆனால் பின்வரும் அறிகுறிகளைக் கொண்டு ஒருவர் உளப்பாதிப்புக்குள்ளாகி இருப்பதை அறிய முடியும் என உள வைத்திய நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.

1. வழமையான நடவடிக்கைகளில் ஏற்படக் கூடிய குறிப்பிடத்தக்கமாற்றங்கள்

2. அன்றாட வேலைகளை நிறைவேற்றாமை.

3. திடீரென்று தோன்றும் அதிக பயம்.

4. எதிலும் ஆர்வமினமை.

5. மகிழ்ச்சியை வளமைக்கு மாற்றமாக வெளிப்படுத்தல்.

6. காரணமின்றி சந்தேகப் படுதல், பயப்படுதல்.

7. உணவு, நித்திரை செய்வதில் மாற்றங்கள்.

8. தற்கொலை பற்றிய எண்ணம்.

9. மதுபானம், போதைப்பொருள், சிகரெட் அதிகம் பயன்படுத்துதல்

10. காரணமின்றி யோசித்தபடி இருத்தல்

உளநலம் பாதிக்கப் பட்டவர்கள் இன்று உலகத்தில் மனித நேயத்துடன் கவனிக்கப் படுவது குறைவாகவே உள்ளது. இவர்கள் தங்களுக்கென்று தனியான உலகத்தில் வாழ்ந்து வருகிறார்கள். சாதாரன மனிதனைப் போன்று அனைத்தும் தேவையானவர்கள். அவர்களின் உணர்வுகளும். திறமைகளும் மதிக்கப் படுவது அவசியமாகும். தங்களது தனியான உலகத்தில் மேற்கொள்ளும் செயற்பாடுகள் சாதாரண வாழ்க்கைக்குப் வேறுபட்டதாக இருந்த போதிலும் அவர்களை ஏற்று மதிப்பளிப்பதற்கு சமூகத்திலுள்ளவர்கள் சிலவேளை தவறிவிடுகின்றார்கள்.

உளநோயாளிகளுக்கான சிகிச்சை முறையானது நீண்ட வரவாற்றைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. வரலாற்றுக்கு முந்திய காலத்தில் வாழ்ந்த மக்கள் மனநோயானது கெட்ட ஆவிகளின் செயற்பாடாக எண்ணினார்கள். இதனால் மந்திர வாதிகளினதும், பாரம்பரிய சிகிச்சையான பேயோட்டுதல், கழிப்புக் கழித்தல், வாக்குச் சொல்லுதல் போன்ற முறைகளைப் பயன் படுத்தியுள்ளார்கள். இக்காலத்திலேயே மண்டையோடுகளைத் துளையிட்டு ஆவிகளை வெளியேற்றும் சிகிச்சை முறையும் காணப்பட்டது.

தற்காலத்தில் உள்ள சிகிச்சை முறைகளில் மருத்துவச் சிகிச்சையுடன் உளவளத்துணை, சாந்த வழிமுறைகள் மற்றும் புணர்வாழ்வு நடவடிக்கைகள் என்பன மேற்கொள்ளப்படுகிறது.புற்றுநோய், நீரிழிவு, உயர்குருதி அமுக்கம் , மூட்டுவலி போன்ற உடல் நோய்களை பூரணமாக குணப்படுத்த முடியாதிருப்பதுபோல் அதிகமான மனநோய்களையும் முற்றாக குணப்படுத்த முடியாது.இருப்பினும் முறையான சிகிச்சைகள் மூலம் உடல் நோய் உள்ளவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவது போன்று மனநோயாளிகளினதம் வாழ்க்கையினை முன்னேற்ற முடியும். 

மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் வைத்தியர்கள் சில வேளைகளில் சிக்கல்களை எதிர் கொள்கின்றார்கள். நோயாளிகளின் நோய் குணமடைந்ததும் மருந்துகளைத் தொடர்ந்து எடுப்பதற்கு விரும்புவதில்லை. சில மருந்துகளில் சிறிய சிறிய பக்கவிளைவுகளின் அசௌகரியங்கள் இதற்குக் காரணங்களாகும்.இவ்வாறு மருந்துகளை இடையில் விடுவது மனநோயைப் பொறுத்த வரை மீண்டும் நோய் வருவதற்கு காரணமாக அமையக்கூடும். இவ்வாரான சந்தர்ப்பங்களில் குடும்பத்தினதும், சமூக சேவையாளர்களின் ஒத்துழைப்பும் அவசியப் படுகின்றது. நோயைக் குணமடையச் செய்வது மட்டுமல்லாது மீண்டும் நோய் ஏற்படாது பாதுகாப்பதும் முக்கியமாகும். 

உளநோயாளர்களக்கு உதவுவது என்பது இறைபணியாகும். அப்பணியைச் செய்வதற்காக எல்லோருக்கும் வாய்ப்புக்கள் ஏற்படுவதில்லை. வாய்ப்பினைப் பெற்றவர்கள் இறையன்பைப் பெற்றவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

இன்று எல்லாச் சமூகங்களிலும், எல்லாப் பகுதிகளிலும் மனநோய் பொதுவான நோயாக இருப்பதைக் காணமுடிகின்றது. மனநோயானது பெரும் பாதிப்பையும் அதிக இயலாமையையும்

ஏற்படுத்தக்கூடியது. இந் நோய் வயது வந்தவர்களுக்கு காணப்படுவதைப் போல் சிறுவர்களையும் பாதித்துவருவது துர்ப்பாக்கிய நிலையாகும். எனவேதான் உளஆரோக்கியம் என்பது சமூகத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் அவசியமானதொன்றாகும். ஆனால் மக்கள் மத்தியில் உளநோய் தொடர்பான விழிப்புணர்வு இன்னும் முழுமையாகச் சென்றடையாதிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

நமது நாட்டில் அதிகரித்து வரும் நோயாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவகையில் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளார்கள். இவர்கள் கடுமையான மனநோயாளர்களுக்கு சிகைச்சை அழிப்பதிலேயே முக்கிய கவனத்தையும் அதிகநேரத்தையும் செலவு செய்கின்றார்கள். இதனால் பொதுவான பல உளப்பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க முடியாதுள்ளது. எனவேதான் சமூகத்திலுள்ள ஒவ்வொரு பிரிவினரும் இவ்விடயம் தொடர்பாக சிந்தித்து ஆக்கபூர்வமான செயற்றிட்டமொன்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த இன்றைய சர்வதேச உளநல தினத்தில் உறுதிபூணவேண்டும்.


3 comments:

  1. எல்லா விதமான கருத்துக்களையும் பதிவு செய்தjm ,குறிப்பாக அவன், ஜெயபாலன் போன்ற முஸ்லிம் எதிர்ப்பு எழுத்தக்களை பதியும் jm , எனது பதிவுகளைத் தவறவிடும் அளவிற்கு தரம் கெட்டதேனோ?

    ReplyDelete
  2. This all suitable for Pohattuwa members so its mean they all effects cyclogicts

    ReplyDelete
  3. சம்பந்தப்பட்ட வாசகர்கள் வழங்கிய சில நல்ல கருத்துக்களை JM பல முறை, தணிக்கை செய்யப்பட்டுள்ளன. ஆனால் JM எடிட்டர்
    தீர்ப்பை சமநிலைப்படுத்த அதைச் செய்கிறார் என்று நான் நம்புகிறேன். பல முறை, எனது தீவிர பகுப்பாய்வுக் கருத்துக்கள் சில தணிக்கை செய்யப்பட்டுள்ளன. பத்திரிகை நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றி தொழில்முறை மற்றும் பகுப்பாய்வு ரீதியான தீவிரமான கருத்துக்கள் வெளியிட அனுமதிக்கப்பட்டால் நல்லது, இன்ஷா அல்லாஹ்.
    Noor Nizam – Convener “The Muslim Voice”.

    ReplyDelete

Powered by Blogger.