Header Ads



கம்பஹாவில் முதலில் கொரோனாவுக்கு இலக்கான, பெண்ணின் கணவர் வெளிப்படுத்திய முக்கிய விடயம்


கம்பஹா - திவுலபிட்டிய பகுதியில், கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ள பெண்ணின் கணவர் முக்கிய விடயமொன்றை வெளிப்படுத்தியுள்ளார்.


இதன்படி அவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு குறிப்பிடுகையில், தனது மனைவிக்கு ஆடைத் தொழிற்சாலையைத் தவிர வேறு எந்தவொரு இடத்தில் வைத்தும் கொரோனா தொற்று ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கவில்லை.


எனவே மனைவி பணியாற்றும் தொழிற்சாலைக்குள் வைத்தே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


என்ற போதும் குறித்த 39 வயது பெண்ணுக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் அவரது 16 வயது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


மேலும் குறித்த பெண்ணின் கணவர் மற்றும் ஏனைய மூன்று பிள்ளைகளும் காலி - ஹபராதுவ பொலிஸ் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

3 comments:

  1. what is that important message/ information?

    ReplyDelete
  2. Please learn to design an appropriate heading. We have several times observed that there won’t be any nexus between the news items and the headings. Please make sure standard in your news items.

    ReplyDelete
  3. இதில் எந்த முக்கிய தகவலும் இல்லையே

    ReplyDelete

Powered by Blogger.