Header Ads



இனவாதிகளை கண்டு நாம் பயப்பட மாட்டோம், எனது சகோதரரின் விடுதலைக்கும், அரசியலுக்கும் தொடர்பில்லை - ரிஷாத்


(எம்.மனோசித்ரா)

நாட்டினதும் மக்களினதும் நன்மை பற்றி ஆராய்ந்த பின்னரே நாம் அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுப்போம். மாறாக இனவாதிகளுக்கு அச்சமடைந்து எவ்வித தீர்மானங்களையும் எடுப்பதில்லை. 

எனது சகோதரர் விடுதலை செய்யப்பட்டமைக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

சகோதரரை விடுதலை செய்தால் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளிப்பதாக ரிஷாத் பதியுதீன் அரசாங்கத்திடம் தெரிவித்திருக்கக் கூடும் என்று நாம் சிங்களவர் என்று அமைப்பு தெரிவித்துள்ளமை குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாறு கூறப்படுவது அப்பட்டமான பொய்யாகும். எனது சகோதரர் ரியாஜ் பதியுதீன் நியாயமற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டார். 

அவை நிரூபிக்கப்படாமையால் ஐந்தரை மாதங்களின் பின்னர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் விடுதலை செய்யப்பட்டமைக்கும் அரசியலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களால் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு சுமார் 500 பேர் காயமடைந்துள்ளனர். இது மோசமானதொரு சம்பவமாகும். 

இது போன்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும்போது அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும்.

அதனடிப்படையிலேயே என்னுடைய சகோதரர் மீது போலி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதும், அவர் கைது செய்யப்பட்டபோதும் நாம் எவ்வித போராட்டங்களிலும் ஈடுபடவில்லை. 

அவர் நியாயமற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதால் நிச்சயம் விடுதலையாவார் என்ற நம்பிக்கை எமக்கிருந்தது. 

அதற்கேற்ப அவர் கைது செய்யப்பட்டவர்களாலேயே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதற்கும் அரசியலுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. நாடு மற்றும் மக்களின் நன்மைகளை அடிப்படையாகக் கொண்டே நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசியல் தீர்மானங்களை எடுத்துள்ளோம். 

மாறாக ' நாம் சிங்களவர் ' என்ற அமைப்பை போன்ற இனவாதிகளுக்கு பயந்து அல்ல என்றார்.  

4 comments:

  1. Now all people know that true insha Allah true will always win.

    ReplyDelete
  2. உலகத்திலே "நாம் இந்தியர்" என்ற அமைப்பு உள்ளது அதுபோல் "நாம் இற்றாலியர்" "நாம் பாகிஸ்தானியர்" " நாம் சீனர்" இப்படியான அமைப்புக்கள் எல்லாம் உள்ளன. "நாம் சிங்களவர்" என்பது கேலிக்குரியதாகப் பார்க்கப்பட வேண்டியதாகும். உலகின் எந்த நாட்டிலும் ஒரு இனத்திற்கான அமைப்பு கிடையாது. "நாம் இந்துக்கள்" "நாம் முஸ்லிம்கள்" "நாம் கிறித்தவரகள்" என்பது எல்லாம் கேலிக்குரிய அமைப்புக்களாகும். இலங்கையில் மிக அதிகமான உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவிப்பவர்கள் சிங்களவரகள்தான். தமிழர்களும் முஸ்லிம்களும் தங்களுக்கு கிடைக்க வேண்டியதையும் விடக் குறைவாகவே அனுபவிக்கின்றனர். கிடைக்க வேண்டியதைக் கிடைக்காமல் செய்வதற்கே வேற்றின அரசியல்வாதிகளும் மற்றும் மதகுருமார்களும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

    இரண்டாவது நீதித்துறையின்மீது எவரும் சேறு பூசுவதற்கு முனையக்கூடாது. அவரகளும் நல்லமுறையிலேயே நடக்க வேண்டு:ம் நடக்கின்றார்கள். இததுறைகளில் சகல இனததவரகளும் இருக்கின்றனர். சில சம்பவங்களை பேசியே தீர்த்துக் கொள்ளல் வேண்டும்.

    ReplyDelete
  3. ஐயா அரசியல் எல்லாம் இதெல்லாம் சகஜமப்பா 20ஆவது திருத்தச் சட்டத்தை சரி செய்வதற்காகத் தான் இந்த காய் நகர்த்தல்கள் உங்களுக்கு புரிய வில்லையா...?

    ReplyDelete

Powered by Blogger.