Header Ads



ரிஷாத்தின் சகோதரர் விடுதலையானதை எதிர்க்கிறேன், இரகசிய ஒப்பந்தமாக இருக்கலாம் - மெல்கம் ரஞ்சித்திற்கு சந்தேகம்


(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நபர் தற்போது திடீரென விடுதலை செய்யப்பட்டுள்ளமைக்கு கடும் எதிர்ப்பினை தெரிவிப்பதாகக் கூறிய பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, இதன் பின்னணி அரசியல் ரீதியான இரகசிய ஒப்பந்தமாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் கூறினார்.

விடுதலை செய்யப்பட்டுள்ள நபர் தொடர்பில் ஆரம்பத்தில் கூறப்பட்ட விடயங்களுக்கும் தற்போது கூறப்படும் விடயங்களுக்குமிடையில் வேறுபாடுகள் உள்ளன. 

இவர் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறிய தகவல்கள் எம்மிடம் உள்ளன. குற்றப்புலனாய்வு பிரிவினரின் செயற்பாடுகளில் முரண்பாடான நிலைமை காணப்படுகிறது. 

தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு கவலையடைந்துள்ள மக்களுக்கான விசாரணைகள் பக்கசார்பற்ற முறையில் நடத்தப்படுமா இல்லையா என்ற பயம் எமக்கு ஏற்பட்டுள்ளது. அத்தோடு இதில் அரசியல் ரீதியான இரகசிய ஒப்பந்தம் காணப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் எம்மிடம் கேள்வியெழுப்புகின்றனர். இந்த விடயத்தை சாதாரணமாக விட முடியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இனங்காணப்படுவதற்கான நடவடிக்கைகள் ஒழுக்கத்துடனும் பக்கசார்பற்ற ரீதியிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோருகின்றோம் என்றும் அவர் மேலும் கூறினார்.

கொழும்பில் இன்று -03- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

9 comments:

  1. Can u force to make investigation on Dihna, Kandy, Ampara and Kurunegala killings too??? or u r silent on those incidents bcs of its happend during My3 regim???

    ReplyDelete
  2. இந்த மனிதருடைய கோர முகம் சில சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டு செல்லும்

    ReplyDelete
  3. எமது கொழும்பு பேராயரின் கருத்தை நான் ஆதரிக்கின்றேன். இவர் அரசியல்வாதியல்ல பொய் சொல்லுவதற்கு.
    றிசாத், ராஜபக்சாக்களின் காலில் விழுந்து கெஞ்சி ஒருவாறு தனது சகோதரனை விடுதலை செய்துவிட்டார்,

    ஆனால் இது நீதிக்கு எதிரான செயல். கோட்டா அரசு இருவரையும மீண்டும. சிறையில் அடைக்கவேண்டும்

    ReplyDelete
  4. Brother Shahab,he is talking for his people who were killed by bomb blast, our so called Muslim leaders should should have demanded justice for Muslim people.

    ReplyDelete
  5. Ajan neer kandeera? Rishad kaalil velundazai

    ReplyDelete
  6. He has full right to talk on behalf of affected victims... Who ever committed the killing of innocent people and those who supported are not from practicing Muslims. IF confirmed, any body to be involved in such act should be punished with no favoritism.

    BUT that process should be done with justice and not politically motivated.

    ReplyDelete
  7. This is a court/judgement contemplating case. Action must be taken against Cardinal and Ajan.

    ReplyDelete
  8. Ofcourse brother MMM, he is talking to his people I agree and also he is not a racist...correct!!! and he is Malcolm Cardinal. So he must talk about the incident at-least against to the Kurunegala innocent muslim brother's death. Because its related to this terrorist attack...!!!

    ReplyDelete
  9. Why the most prominent "FULASTHINI" matter being blackout? Cardinal also aware no? please raise your voice in this also.

    ReplyDelete

Powered by Blogger.