Header Ads



’வைத்தியசாலைகளுக்கு செல்வதை குறைத்துகொள்ளுங்கள்’


வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை பார்வையிடச் செல்லும் அவர்களது உறவினர்கள், கைக்கழுவுதல்,  முகக்கவசங்களை அணிதல்,  ஒரு மீற்றர் சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார படிமுறைகளை கடு​மையாக பின்பற்ற வேண்டுமென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 


அத்தோடு, வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெரும் உறவினர்களை பார்வையிடச் செல்வதை குறைத்துக்கொள்வது சிறந்ததெனவும் பதில் சுகாதார பணிப்பாளர் நாயகம் எஸ்.ஸ்ரீதரன் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.


அத்தோடு, சிகிச்சை பெறுபோருக்கு வழங்குவதற்காக எடுத்துச் செல்லப்படும் பொருள்களை கையளிப்பதற்கும் மாற்று நடைமுறையொன்றை கையாளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


அத்தோடு, அத்தியாவசியமான மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காக அருகிலுள்ள வைத்திசாலைக்கு மட்டும் வருகைத்தருமாறும் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.