Header Ads



பாதுகாப்பு அங்கியுடன் பாராளுமன்றம் வந்த றிசாத்


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். 

சிறைச்சாலை அதிகாரிகளின் விசேட பாதுகாப்பின் கீழ் சுகாதார பாதுகாப்பு அங்கி அணிந்து அவர் பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். 

மேலும், சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய பாராளுமன்றில் விசேட ஆசனமொன்றை அவருக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



4 comments:

  1. மனதால் கூட மற்றவர்க்குத் தீங்கெண்ணாத உங்களுக்கா இந்தத் தீய சோதனை? எங்கள் சமூகத்தின் உரிமை, உயர்வு, உய்வு என்று இத்தனை வருடங்களாக ஊண் மறந்து, உறக்கம் துறந்து ஓயாது பாடுபட்ட உங்களுக்கா இந்தத் துன்பங்கள்? நாம் அகதிகளாகி முப்பது வருடங்கள் முடிகின்ற இந்தக் கருப்பு அக்டோபரில் அகதிகளுக்காக அல்லும் பகலும் பாடுபட்ட அகதிகளின்அதிதியான தங்களுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் இந்த நிலை எம் விழிகளில் கண்ணீரை வழியச் செய்கிறது.

    அகதிகளை வாக்களிக்கச் செய்வதற்காக அரச பஸ்களில் அழைத்துச் சென்றாராம் என்று காரணம் காட்டி, ஆறு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு, நாடு முழுவதும் தேடு, தேடு என்று தேடிக் கைது செய்து ஒரு முன்னாள் அமைச்சரை, இன்னாள் எம்.பியை, ஒரு கட்சியின் தலைவரைக் காவலில் வைத்திருக்கும் இந்த விந்தை நிகழ்வு உலகில் வேறெங்கும் இதுவரை நடந்திராத ஒன்று. விரைவில் அல்ஜசீரா போன்ற சர்வதேச ஊடகங்கில் இந்த விடயம் பேசுபொருளாகும்.
    அல்லாஹ் தான் நேசிப்பவர்களுக்கு சோதனைகளை அதிகப்படுத்துவான் என்ற நம்பிக்கையில் தாங்கள் பொறுமை காக்க வேண்டும். “நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்!” என்னும் அல்லாஹ்வின் வசனத்தை அடிக்கடி ஓதி வாருங்கள். இன்ஷா அல்லாஹ், விரைவிலேயே இந்த இருள் விலகி முன்னரைவிடப் பிரகாசமான புதிய ஒளி பரவும்!

    ReplyDelete
  2. சுகாதார (மங்குனி) அமைச்சரின் கருத்துப்படி பாராளுமன்றம் பொது இடம் இல்லையே ..அங்கு கொரோனா வராதே ....

    ReplyDelete
  3. இன்றைய நாளில் ரிசார்ட் அவர்கள் பாராளுமன்றம் செல்லாமலே இருக்க இருந்திச்சி ஏனேனில் அவர் 20 இலக்க சட்டத்தில் இருந்து கலந்து கொள்ளாமல் தாவர இருந்தது.

    ReplyDelete
  4. 20ம் நாடகத்தின் ஒரு அம்சம் இது.

    ReplyDelete

Powered by Blogger.