Header Ads



படையினரின் தியாகத்தால் போரை முடிவுக்குக் கொண்டு வந்தோம், ஒற்றையாட்சித் தீர்வாகவே இருக்கும் - தினேஷ்


தமிழர்கள் அரசை மதித்து - அரசமைப்பை மதித்து நேர் வழியில் நடந்தால் அவர்களுக்கான அரசியல் தீர்வும் தானாகவே கிடைக்கும்.

ஆனால், அந்தத் தீர்வு ஒற்றையாட்சித் தீர்வாகவே இருக்கும். அதையும் அவர்கள் உதறி எழுந்தால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

தமிழர்கள் செவ்வாய்க் கிரகம் சென்றுதான் தமக்கான தீர்வைக் கேட்க வேண்டி வரும் என சபை முதல்வரும் வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் அரசமைப்பை மதித்து - அரசை மதித்துத் தமிழர்கள் நேர் வழியில் நடந்திருந்தால் ஆயுதப் போராட்டம் ஒன்று நடந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது. பல இழப்புகளையும் தமிழர்கள் சந்திக்க வேண்டி வந்திருக்க மாட்டாது.

படையினரின் தியாகத்தால் ஆயுதப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தோம். தமிழர்கள் நிம்மதியாக வாழும் நிலையை ஏற்படுத்தினோம். ஆனால், அவர்கள் திரும்பவும் பழைய நிலைக்கே செல்ல முற்படுகின்றார்கள்.

ஆயுதப் போராட்டக் காலத்தில் உயிரிழந்த பயங்கரவாதிகளான விடுதலைப்புலிகளை நினைவுகூர அனுமதி கேட்டு வடக்கு, கிழக்கில் ஹர்த்தாலைத் தமிழர்கள் அனுஷ்டித்துள்ளார்கள்.

போதாக்குறைக்கு இந்து ஆலயம் முன் உண்ணாவிரதமும் இருந்துள்ளார்கள்.

அரசையும் சிங்கள மக்களையும் சீற்றமடையைச் செய்யும் வகையில் தமது நடவடிக்கைகளைத் தமிழர்கள் முன்னெடுக்கின்றார்கள்.

நாட்டைப் பிளவுபடுத்தும் அரசியல் தீர்வு வேண்டும் என்று ஒற்றைக்காலில் அவர்கள் நிற்கின்றார்கள்.

தமிழர்கள் அரசை மதித்து - அரசமைப்பை மதித்து நேர் வழியில் நடந்தால் அவர்களுக்கான அரசியல் தீர்வும் தானாகவே கிடைக்கும்.

ஆனால், அந்தத் தீர்வு ஒற்றையாட்சித் தீர்வாகவே இருக்கும். அதையும் அவர்கள் உதறி எழுந்தால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

தமிழர்கள் செவ்வாய்க் கிரகம் சென்றுதான் தமக்கான தீர்வைக் கேட்க வேண்டி வரும் என்று கூறியுள்ளார்.

2 comments:

  1. ஐயா தினேஷ் இந்த தமிழ் பிரிவினைவாதிகளாலும்,ஆசியாவின் அசிங்கம் இந்தியாவாலும் இங்கு எதுவுமே சாதிக்க முடியாது. கடைசிவரை சமஸ்டி, ஈழமென்று கனவுகண்டு கொண்டு நாளு கிழடுகளை வைத்து கத்தமட்டுமே முடியும். ஆகையால் செவ்வாய் கிரகம் அனுப்புவதை விட்டு பிரபாகரனின் இடத்திற்கு அனுப்புவோம் என்று பயம் காட்டினாள் போதும்

    ReplyDelete
  2. ஸ்ரீ லங்கா - சிங்கப்பூர், மலேசியா போன்று செழிப்பாக இருக்க வேண்டுமாயின், சிங்களம் போன்று தமிழிலும் சகல அரச பணிகளையும் நீதியாக செய்து கொள்ளக் கூடிய பொறிமுறை ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்து விட்டாலே போதும். 

    அப்போது யாரும் பிரிவினை எண்ணம் கொண்டு தம்மைத் தாமே ஆளக் கேட்டு பிரச்சினைப் படுத்த மாட்டார்கள்.  நீதி செலுத்தப்பட்ட இலங்கையர் என்ற உணர்வோடு வாழ்வர்.

    செய்ய வேண்டிய இதனைச் செய்யாது காலத்தைக் கடத்திக் கொண்டு இருந்தால் இந்த நாடு எப்போதும் ஸ்ரீ லங்கா மாதிரியேதான் இருக்கும். 

    அதை விடத் தரம் கெட்ட அநீதமான இன்னோர் நாடொன்றை உதாரணமாகக் கண்டுபிடிப்பது கூடக் கஷ்டமாக இருக்கும். செய்வார்களா?

    ReplyDelete

Powered by Blogger.