Header Ads



நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்கள், முஸ்லிம்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்று உணர்ந்துள்ளேன் - மக்ரோன்


நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்கள் முஸ்லிம்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்று தான் உணர்ந்துள்ளதாகவும், ஆனால் வன்முறையை நியாயப்படுத்த இதை ஒருபோதும் பயன்படுத்த முடியாது என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் அல்-ஜசீரா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

"கேலிச்சித்திரங்களால் மக்கள் அதிர்ச்சியடையக்கூடும் என்பதை நான் புரிந்து கொண்டேன். ஆனால், வன்முறையை நியாயப்படுத்த இதனை முன்வைப்பதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்" என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் நீஸ் நகரத்தில் உள்ள தேவாலயத்தில் மூன்று பேர் ஆயுதம் ஏந்திய நபர் ஒருவரால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்ததையடுத்து தாக்குதல் தொடுத்த நபர் பயங்கரவாதியாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தையும் அவர் எழுப்பியுள்ளார்.

"நம்முடைய சுதந்திரங்களையும், உரிமைகளையும் பாதுகாப்பது என் கடமையாக நான் கருதுகிறேன்," என்றும் மக்ரோன் கூறியுள்ளார்.

3 comments:

  1. if u think like that you could act faster and remove that teacher from the school and could warn. Plus at least now why you cant ban that news paper who always trying to play bad habbit

    ReplyDelete
  2. We are shocked that the French government will respond to the violence with violence. However, we have never accepted violence. Yet the caricature is our right, and it can never be justified that France will continue.

    ReplyDelete
  3. வன்முறைக்கு France அரசும் வன்முறையில்தான் பதில் அளிக்கும் என்று நாம் அதிர்ச்சியடைகிறோம். இருந்தாலும் வன்முறையை நாங்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் கேலிச்சித்திரம் அது எங்களது உரிமை, அதை France தொடரும் என்று ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.