October 23, 2020

முகக் கவசங்களைப் பயன்படுத்திவிட்டு, கண்ட இடங்களிலும் வீச வேண்டாம்


முகக் கவசங்களைப் பயன்படுத்தி விட்டுக் கண்ட இடங்களிலும் வீச வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

வீதிகள் உள்ளிட்ட பொது இடங்களில்  சிலர் முகக் கவசங்களை அணிந்து விட்டு அதனைப் பாதுகாப்பற்ற முறையில் வீசிச் செல்வதால் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நபர்கள் முறைப்பாடு செய்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகக் கவசங்களைப் பயன்படுத்திய பின் பாதுகாப்பான முறையில் குப்பைத் தொட்டியில் அல்லது உரிய இடத்தில் போடுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கேட்டுக்கொண்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைய முகக் கவசம் அணி வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும் அதனைச் சுகா தார முறையில் அகற்றாதவர்களுக்கு எதிராக நடவடிக் கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a comment