Header Ads



முக்கிய தேரர்கள் இணைந்து, அனுப்பியுள்ள கடிதம்


​தேரர்கள் சிலர் கூட்டாக இணைந்து 20 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

20 ஆவது திருத்தம் ஸ்திரமற்ற அரச பொறிமுறையை உருவாக்கும் என தேரர்கள் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

முருத்தெட்டுவே ஆனந்த தேரர், பெங்கமுவே நாலக்க தேரர் மற்றும் எல்லே குணவங்ச தேரர் ஆகியோர் இந்த கடிதத்தை எழுதியுள்ளனர்.

20 ஆவது திருத்தம் தான்தோன்றித்தனமான நிறைவேற்றதிகாரத்தை வழங்கும் என்பதுடன், அரசியலமைப்பு பேரவை மற்றும் நீதித்துறையை அது கட்டுப்படுத்தும் நிலையை உருவாக்கும் எனவும் தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் காரணமாக பலவீனமான அமைச்சரவை ஸ்தாபிக்கப்படும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. அரசியல் விற்பன்னர்களுக்கு இது நன்கு தெரிந்தும்கூட தமது சுயலாபத்திற்காக uh[gf\u;fs; 20வது திருத்தத்தைச் செயற்படுத்தியே ஆக வேண்டுமெனத் துடிக்கின்றனர். அரசியல் யாப்பு என்பது நாட்டினதும் அதன் மக்களினதும் உயிர் நாடி. இன்றைக்கு ஒரு யாப்பு நாளைக்கு ஒரு யாப்பு என்ற ஒன்று வேண்டாம். ராஜபக்ஷரகளுடைய ஆட்சி என்றோ ஒரு நாள் முடியத்தான் போகின்றது. ஆனால் நாடும் மக்களும் என்றும் இருப்பர். தேரர்கள் மாத்திரம் அல்ல தகுதி வாய்ந்த அதி முக்கிய நடுநிலை அரசியல்வாதிகளையும் புத்திஜீவிகளையும சட்டவாதிகளையும் இணைத்த ஒரு குழுவின் ஊடாக ஒரு குழுவினை உருவாக்கி ருமு மற்றும் ருளுயு போன்ற நாட்டில் எவ்வாறு அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு ஆண்டாண்டுகாலமாக நிலையாக இருக்கின்றதோ அது போன்று ஒரு உன்னத யாப்பினை அரசியல் அமைப்புச் சபையூடாக உருவாக்கிக் கொள்ளல் வேண்டும். அந்த யாப்பு இலங்கையில் வாழும பல்லின மக்களின் அபிலாசைகளையும் பூர்த்தி செய்யக்கூடியதாக இருத்தல் வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.