Header Ads



அரசில் சேர றிசாத் முயற்சித்தால், அவர் விரட்டப்படுவார் - வீரவன்ச



“நாம் உருவாக்கிய இந்த அரசில் நாம் இருப்பதுடன் ரிஷாத் பதியுதீன் இதில் சேர முயற்சிகள் எடுத்தால் அவர் அப்பால் விரட்டப்படுவார்” என தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.


முன்னாள் அமைச்சர் பதியுதீன் அரசாங் கத்தில் இணையத் தயாராக இருந்தமை குறித்த வதந்திகள் பற்றிக் கருத்துக் கூறுமாறு ஓர் ஊடக வியலாளர் கேட்ட போதே அமைச்சர் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார்.


“பதியுதீனை அரசாங்கத்தில் உள்ளீர்ப்பதற்கு எமது அரசாங்கத்தில் ஒரு முட்டாளேனும் இருப்பதாக நான் நம்பவில்லை. அரசாங்க நிகழ்வுகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சமுகமளிக்கின்றனர். அது அரசாங்கத்தில் இணைவதற்கான ஓர் ஒத்திகை அல்ல” என அமைச்சர் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. முஸ்லிம் தலைவர்கள் சூடு சுரனை அற்றவர்கள், பணம்-பதவிகளுக்காக நாக்கை தொங்கவி்டு அலைபவர்கள் என்று சொல்லும்போது இங்கு பலர் சண்டைக்கு வந்தார்கள். இந்த செய்தியை வேறு எப்படி சொல்லுவது?

    ReplyDelete
  2. வதந்திகளுக்கு "போரிடுவது" நல்ல மனிதர்கள் என்று அழைக்கப்படக்கூடியவரகளுக்கு அழகல்ல. என்னுடைய "நல்ல அரசியலவாதிகள்" என்ற பட்டியலில் விமல் இல்லை. ரிசாத் தான் அரசில் சேரப் போகின்றேன் என்று எங்கேயாவது கூறியிருந்தால் பரவாயில்லை. இந்த அறிக்கை பொருந்தும். துள்ளிய மாடு பொதி சுமக்கும் என்று எம் பெரியோர்கள் "சும்மா" ஒன்றும் சொல்லி வைக்கவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.