October 24, 2020

மரிக்கார் ஆக்ரோஷம் - முஷாரப் வெளிநடப்புச் செய்தாரா..? பலாத்காரமாக வெளியேற்றப்பட்டாரா..??


23.10.2020 இடம்பெற்ற எதிர்க்கட்சியின் பாராளுமன்றக்குழு கூட்டத்திற்கு எதிர்க்கட்சியின் அழைப்பின் பேரில் SMM. முஷாரப்  MP அவர்களும் கலந்து கொண்டிருந்தார். 

குறித்த கூட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்களிடம் 20A இன் 17ஆம் சரத்தின் மீதான ஆதரவு குறித்த மரிக்கார் MP  அவர்கள் ஆக்ரோஷமான கேள்வி தொடுத்தார்.

இதற்குப் பதிலளித்த முசாரப் MP அவர்கள் 20A இன் 57 சரத்துகளிலும் எதிர்கட்சி எதிர்க்காத பல சரத்துக்களை முன்வைத்து அது தொடர்பான எதிர்க்கட்சியின் நிலைப்பாடு குறித்து எதிர்கேள்வி தொடுத்தார்.

இதன் போது இடம்பெற்ற காரசாரமான கருத்தாடல்களைத் தொடர்ந்து முஷாரப் MP அவர்கள் நான் SJB உறுப்பினர் அல்ல. எதிரணிக்கு ஆதரவளிக்கும் மாற்றுக்கட்சியின் ஒரு உறுப்பினர் என்று கூறி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.

அவரின் வெளிநடப்பைத் தொடர்ந்து எதிர்கட்சியின் மூத்த உறுப்பினர்களான எரான் விக்கிரமரட்ண மற்றும் ஹர்ஷ டீ சில்வா ஆகியோர் ஆக்ரோஷமாக செயற்பட்ட தமது கட்சி உறுப்பினர்கள் மீது தங்கள் அதிருப்தியை வெளிட்டனர்.

2

ஐ. ம. சக்தியின் குழுக்கூட்டத்தில் இருந்து வெளியேறியமை தொடர்பாக.....     20 ஆம் திருத்தத்திற்கு ஆதரிப்பதா?  எதிர்ப்பதா என்ற தீர்மானமாக இருக்கலாம், வேறெந்த தீர்மானமுமாக இருக்கலாம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியே தீர்மானம் எடுக்கும் அதிகாரம் கொண்ட எனது கட்சியாகும். எனது கட்சியின் தீர்மானத்தின் படி 20ஆம் திருத்தத்திற்கு எதிராக வாக்களித்தேன். நடைபெற்ற 3 வாக்கெடுப்புகளில்   20 ஆம் திருத்தத்துக்கான 1 ஆம்  3 ஆம் வாக்கெடுப்பில் எதிர்த்தே எனது வாக்கினை அளித்தேன்.  20ஆம்  திருத்தத்தின் 57 பிரிவுகளில்  ஒவ்வொன்றாக வாக்கெடுப்பு நடந்த போது   17 ஆம் பிரிவான இரட்டை பிரஜா உரிமைக்கான வாக்கெடுப்பில் ஆதரித்து வாக்களித்தேன்.  20 ஆம் திருத்தத்தின் 57 பிரிவுகளையும்  ஐ. ம. சக்தி  எதிர்க்கவில்லை. சில பிரிவுகளுக்கு நடுநிலை வகித்தார்கள்.  இவ்வாறான சூழலில் 17 ஆம்  பிரிவான இரட்டை பிரஜா உரிமை தொடர்பான விடயத்துக்கு திறந்த வாக்கெடுப்பை எதிர்க்கட்சி கோரிய  போது எதிர்பாராத இவ்வாக்கெடுப்பு அறிவிப்பினால் நான் தனித்து முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் போது பின்வரும் காரணங்களை முன்னிறுத்தி நான் எனது ஆதரவை வழங்கினேன்.                1. இனவாதிகளான விமல், கம்மன்பிலவை விட இனவாதமற்ற பசில் ராஜபக்சவின் வருகையில்  அதிகம் தவறிருக்காது.                   2. இரட்டை பிரஜா உரிமையில் சிறுபான்மைக்கு பாதிப்பில்லை.                             3. நல்ல முன் மாதிரிகளை கொண்ட 19ஆம் திருத்தத்தில் இடம்பெற்ற அரசியல் நோக்கம்  கொண்ட  தீர்மானங்களில் (ராஜபக்ச குடும்பத்தினரை ஆட்சி பீடம் ஏறாமல் தடுக்கும் ) ஒன்றுதான் இரட்டை பிரஜாவுரிமை உடையோர் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டி இட முடியாது என்ற தடை. இதனை 20இல் மாற்றுவதன் மூலம் பழைய 1978ஆம் ஆண்டின் யாப்பு நிலைக்கு செல்லுமே அல்லாமல் இதில் எந்த அதிகார அதிகரிப்பும்   ஏற்பட போவதில்லை.                                            4. 20இன் பின்னர் தொடர்ந்தும் இப்பிரிவு தேவையில்லை என்பதால், இதனை புதிய யாப்பினூடாக ஒழிப்பதாக (இல்லையென்றால் இன்னுமொரு திருத்தத்தினூடாக ) சொன்ன ஜனாதிபதியின் வார்த்தையை நம்பலாம்.           மேற்கூறிய காரணங்களால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எனும் தனிப்பெரும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான எனக்கு தீர்மானம் எடுக்க உரிமை இல்லை என SJB நினைக்குமாக இருந்தால், அந்த SJB ஓடு இணைந்து பயணிக்கும் எந்த தேவையும் எனக்கு இல்லை என்பதிலும்,  acmc இல் போட்டி இட்டு வெற்றி ஈட்டியவன் என்ற வகையில் பாராளுமன்றில் சுயாதீனமாக எதிர் தரப்பில் இயங்குவது சுதந்திரமும், கௌரவமும் மிக்கது என்பதிலும் திருப்தியுற்றவனாக அந்த SJB குழுக்கூட்டத்தில் இருந்து வெளியேறினேன்.                                                  குறிப்பு : சமர்ப்பிக்கப்பட்ட 57 பிரிவுகளுள் SJB யினர் no என்பதனை No என்பதற்கும் abstain என்பதை abstain என்பதற்கும் நான் ஒன்றும் Robot இல்லை.

3

பிரதான எதிர்க்கட்சியான SJB என்று அழைக்கப்படும் சமகி ஜன பலவேகயவின் இன்றைய பாராளுமன்ற குழுக் கூட்டத்திலிருந்து திகாமாடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் வெளியேற்றப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் 'விடியல்' இணையத்தளத்திற்கு தெரிவித்தன.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

20ஆவது திருத்தச் சட்ட மூலம் நேற்று பாராளுன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் ஆராயும் முகமாக பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயவின் பாராளுமன்ற குழு இன்று (23) வெள்ளிக்கிழமை கூடியது.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் சமகி ஜன பலவேகய மற்றும் அதன் பங்காளி கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உருமய ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

எனினும், 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த குறித்த கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப், இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

இதற்கு சமகி ஜன பலவேகயவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டதுடன் அவரை கூட்ட மண்டபத்திலிருந்து வெளியேறுமாறும் வேண்டியுள்ளனர்.

"20ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிர்த்தே வாக்களித்தேன்" என பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் இதன்போது தெரிவித்துள்ளார்.

"20ஐ எதிர்த்தீர்கள்; ஆனால் இரட்டை பிரஜாவுரிமைக்கு ஆதரவாக வாக்களித்தீர்கள். இதனால் இன்றைய கூட்டத்தில் நீங்கள் கலந்துகொள்ள முடியாது" என சமகி ஜன பலவேகயவின் பாராளுமன்ற உறுப்பினர்கள பதலளித்துடன் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரபினை கூட்ட மண்டபத்திலிருந்தும் வெளியேற்றியமை குறிப்பிடத்தக்கது.

2 கருத்துரைகள்:

He is an utter fool and now preparing to make all of fool. We do not need any more lame excuses from you. Shame on you.

Superb dear Musharraf.. Sajith is a hypocrisy racist! He is dangerous than rajapaksha , he is with champika. So, don't go with them, be free .. advise the leader to be independent.

Post a Comment