October 06, 2020

நவீன வழிகேட்டை நிராகரிப்போம் - நாட்டுக்கும், அரசுக்கும் விசுவாசமாக இருப்போம்- அஷ் ஷைக் நாகூர் ளரீஃப்

கடந்த ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் இலங்கை முஸ்லிம் சமூகம் பல்வேறுபட்ட சவால்களையும் சிக்கல்களையும் எதிர் கொண்டுள்ள இவ்வேளையில், மற்றும் ஒரு நவீன வழிகேடு சமூகத்தின் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டுவருகின்றது என்பது ஒரு கசப்பான செய்தியாகும்.

இஸ்லாமிய சமூகம் தனக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்களையும் எதிர்நோக்கி வரும் சவால்களையும் எப்படி முகம் கொடுப்பது என்று தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆலிம்கள், அறிஞர்கள், கல்விமான்கள், அரசியல் சமூக தலைவர்கள் இதுபற்றி இராப்பகலாக ஆலோசனை செய்து கொண்டும், பல்வேறு முயற்சிகள் செய்து கொண்டும் சமூகத்துக்காக பல தியாகங்களையும் செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மற்றும் ஒரு தீவிரவாத சிந்தனையை மக்கள் மயப்படுத்தும், அதிலும் குறிப்பாக இளைஞர் மத்தியில் ஒரு விழிப்புணர்வு என்ற போர்வையில் இது தோற்றம் பெற்றுவருகின்றது.

மேற்கிந்திய தீவினைச் சார்ந்த ஓர் அறிஞர், அவரது பெயர் இம்ரான் ஹுஸைன் என்பதாகும். ஆரம்பத்தில் சூபித்துவத்தில் தடம் பதித்தவர்ளூ தற்போது பகுத்தறிவு ரீதியாகவும் சுயபுத்தியின் அடிப்படையிலும் பல்வேறுபட்ட மறைமுகமான (தஜ்ஜால், யஃஜூஜ் மஃஜூஜ்) போன்ற அம்சங்களை மக்கள் மயப்படுத்தி, கவரப்பட்டு வருகிறார். இவர் பரப்பி வரும் வழிகெட்ட கருத்துக்களை உள்வாங்கி, அதில் ஈர்க்கப்பட்ட தமிழ் நாட்டைச் சேர்ந்த முஸ்தபா என்பவர் செயல்பட்டு வருகிறார். தனது சிந்தனை அமைப்பிற்கு 'சூப்பர் முஸ்லிம்' என்று பெயரும் சூட்டி உள்ளார். அதாவது, தம்மைச் சாராதோர் முஸ்லிம்களில் தரம் குன்றியவர்களே என்பது இதன் பொருளாகும் எனலாம்.

தற்போதைய அவர்களது பிரச்சாரத்தில் மையமாக கொள்ளப்படுவது, 'தாப்பதுல் அர்ழ்'  பூமியிலிருந்து வெளிப்படும் (அதிசய) கால்நடைளூ இதை அபூ{ஹரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.                  (சஹீஹ் முஸ்லிம் : 2490).

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இதற்கு, இம்ரான் ஹுஸைன் என்பார், இஸ்ரேலின் நிலையை குறிப்பதே மேற்படி ஹதீஸின் விளக்கமாகும் என்று தன்னிச்சையாக விளக்கமளித்துள்ளார்.

அது போன்று, 'ஆகவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர் பார்ப்பீராக'.                               (அல் குர்ஆன், 44:10). தெளிவான புகை என்று அல்லாஹ் குறிப்பிடுவது உலக மாசுபாட்டையே ஆகும் என்று தெட்டத் தெளிவான பிழையான வழிகெட்ட விளக்கத்தினை வழங்கியுள்ளார்.

உலக முஸ்லிம்களால் அல் குர்ஆனுக்கு அடுத்ததாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சஹீஹ் புகாரி போன்ற நம்பத்தகுமான கிரந்தங்களில் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் உள்ளன என்பன போன்ற பல வழிகெட்ட கருத்துக்களையும் நச்சுச் சிந்தனைகளையும் வளர்க்கின்றனர்.

இவர்கள் மனோ இச்சையின் அடிப்படையில் சுயபுத்தியை பயன்படுத்தி அல் குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் விளக்கம் அளித்து, சமூக மட்டத்திலுள்ள குறிப்பாக இளைஞர்களையே இலக்காகக் கொண்டு செயல்படுகின்றனர்.

இம்ரான் ஹுஸைன் என்பவரது கோட்பாடுகள் பற்றி சகோதரர் முஸ்தபாவுக்கு கூட முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று எண்ணத் தோன்றுகின்றது.

அவரது இலக்கு பற்றி றறற.யடளாயாநன.யாடயனயடடை.உழஅ இணையத்தளத்தில் விளங்கிக் கொள்ளலாம்.

அவர்களது தற்போதைய இலக்கும் மறுமைநாள் உடைய மறைமுகமான அடையாளங்களை மக்கள் மயப்படுத்துவதாக இருந்தாலும், இஸ்லாமிய கிலாபாவை மீட்டெடுப்பதுவே அவர்களது இறுதி இலக்காகும் என்பதை மேற்சொன்ன இணையத்தில் விளங்கிக் கொள்ளலாம்.

அந்த அடிப்படையில் நோக்குகின்றபோது, ஏப்ரல் 21 தாக்குதலுக்கு காரணமாக இருந்த மிலேச்சத்தனமான அந்த தீவிரவாதிகளின் அதே இலக்கையும் உள்நோக்கையும் போக்கையும் கொண்டதாகவே, இவர்களது சித்தாந்தம் அமைந்திருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும்.

எனவே, இஸ்லாம் பற்றி நம்பத்தகுந்த மார்க்க அறிஞர்களது எதுவிதமான வழிகாட்டலும் இல்லாது, வெறுமனே இணையவழிக் கல்வியை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இளைஞர்கள் விடயத்தில், சமூக தலைவர்கள் குடும்பத் தலைவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய ஒரு கடப்பாடு இருக்கிறது.

இவர்கள் விடயத்தில் அசட்டையாக இருப்போமேயானால், இறுதியில் ஏப்ரல் 21 நடைபெற்ற பின்னர் முழு சமூகமும் கைசேதப்பட்ட அதே நிலைக்கு மீண்டும் எமது சமூகம் தள்ளப்படும் என்பதில் ஐயமில்லை.

பல்வேறு இஸ்லாமிய அழைப்பு அமைப்புகளை சார்ந்தவர்களும் இச்சித்தாந்தத்தின் மீது கவரப்பட்டு அதன் பக்கம் சரிந்து கொண்டிருக்கின்றனர்.

அவர்களது ஆடை கலாச்சாரமும் மாற்றம் அடைந்திருப்பதாக அறியமுடிகிறதுளூ கருப்பு நிற தலைப்பாகை அணிந்தவர்களாக இளைஞர்கள் தோற்றமளிக்கின்றனர்ளூ அவர்களில் பலர் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் விடயத்தில் சமூக, மஸ்ஜித்களின் நிர்வாகத்தினர் கவனமெடுத்து உரிய தரப்புக்கு முறைப்பாடு செய்து சமூகத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்.

இவர்களது இணையவழி கல்வியில் ஈடுபாடு கொண்டவர்கள், சமூகப்பற்றும் சமய சிந்தனையும் கொண்டவர்களாக இருந்தவர்களே ஆவர்.

இவர்களைப் பற்றி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு இருக்கிறது.

பகுத்தறிவைப் பயன்படுத்தி அல் குர்ஆனையும் ஹதீஸையும் இஸ்லாமிய ஷரீஆவையும் விளங்கப் போய், பல்வேறுபட்ட வழிதவறிய சித்தாந்த குழுக்கள் உருவாகின என்பது வரலாறு ஆகும்.

அத்தகைய மோசமான, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பாதகமான ஒரு வரலாறு மீண்டும் இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது.

இலங்கை அரசும் புலனாய்வுத் துறையினரும் மிகுந்த அவதானத்துடன் இருக்கும் இவ்வேளையில், சமூக மற்றும் தேசப் பற்றுள்ள நாம், இது பற்றிய தெளிவினை வழங்கி, எமது இஸ்லாமிய சமூகம் என்றும் நாட்டுக்கும் அரசுக்கு கடமைப்பட்டவர்களாகவும் இருக்கிறோம் என்பதை நிரூபித்து பாதுகாப்பிற்கான முன்னேற்பாடுகளை செய்து கொள்வோமாக!.

(இன் ஷா அல்லாஹ் தொடரும்...)

20 கருத்துரைகள்:

இது ஒரு முட்டாள்தனமான பதிவு, இது வேற தொடரும்

could you please share your contact details? I have many questions from you.

I am also seeing his (Imran Husain) video's about world politics through Islam (like paper money is Haram, Dollar is common currency). After seeing some of his videos only i came to know Allah send all his messengers from Nabi Ibrahim (AS) progeny etc. i have not been tech by so-called imam even in one Jummah.

in his videos he always says "if you say i am wrong i will not accept until you tell me the right", till now no one tell the right things accept saying that he is "lying" including you. therefore ordinary people still thinks that he is right. specially on wold economics/politics theories he is giving extraordinary explanations.
However i could not accept saying that he teach terrorism or killing people. please you don't create unnecessary statement. be a Muslim. I do have sociable and patriotic.

Thanks.

You should listen all videos of them before posting this kind of stupid review.

ஜஸாக்கல்லாஹ் சகோதரர் அஷ் ஷைக் நாஹூர் ளரீஃப் அவர்களுக்கு,

சிறிது காலத்துக்கு முன்பு எனது சொந்த அனுபவத்தின்படி, இனைய தேடலில் எதேச்சையாக முஸ்தபாவின் "Super Muslim" அறிமுகமானது. அதில் புதுமையான, மயக்கமான, வழிகேடான கருத்துக்களை உண்மையில் என்னால் அவதானிக்க முடிந்தது.

முஸ்தபா விவாதிக்கும், விளக்கம் சொல்லும் தலைப்புக்கள் பற்றிய விபரங்கள் ஏற்கனவே ஒருவருக்கு புனித குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களின் அடிப்படையில் தரப்பட்ட தெளிவானதும் முடிவானதுமான விளக்கம் இல்லாது போனால், நிச்சயமாக முஸ்தபாவின் புதுமையான, மயக்கமான, ஏன் வழிகேடான விளக்கங்கள் அவரை வழிகேட்டுக்கு கொண்டு செல்லும். அல்லாஹ் காப்பாற்றுவானாக.

Dear Jaffnamuslim,
Don't posting a article without name of the writer and profession.

இது ஒரு முட்டாள் தனமான பதிவு......
SUPER MUSLIM உபதேசத்துக்கும் உங்கள் அவதூறுக்கும் சம்பந்தமே இல்லை ...
அள்ளாஹ்வை பயந்துகொள்ளவும்

Ulaha maha pandizar ya neer.....zahran isis aalu...isis kum islattukkum enna sambanbam..ulaga arivi konjamavazu irukka...unakku....

Ulaha maha pandizar ivaru....poda loosu payale....zahran oru peyan...maanga madayan avan..
Avan isis kaaran...avanukkum islatthukkum enna da sambandham....loosu maanga

சிந்தனைதிறன் குறைந்த பதிவு. இன்னும் இந்த சேனலை பற்றி உங்களுக்கு தெரியவில்லை. நன்றாக முழுமையான அறிவுகொண்டு அணுகுங்கள். நேர்வழி பெறுவீர்கள். அல்லாஹ்வே போதுமானவன். இத்தோடு நிறுத்தி விடுங்கள். இந்த பதிவையும் எடுத்துவிடுங்கள். அவதூறான பதிவு...

நாட்டுக்கு நிச்சயமாக விசுவாசமாக இருக்கவேண்டும் . ஆனால் தற்போது நம்நாட்டிலும் இந்தியாவிலும் உள்ள இனவாத பயங்கரவாத அரசுகளுக்கு அல்ல. Jaffna muslim should avoid posting this kind of stupid article.

சூப்பர் முஸ்லிம் என்ற பெயரில் வழிகெட்ட ஷீஆ மற்றும் ஹவாரிஜிய சிந்தனைகள் பரப்பப்படுகிறது... இதிலிருந்து எம்மை எம் சமூகத்தையும் பாதுகாப்பது எமது கடமையாகும். இது போன்ற விஷமிகளை சமூகத்துக்கு அடையாளப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும்...

மேலும் இவர்களின் வழிகெட்ட கருத்துகளுக்கு அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தின் உலமாக்கள் பல்வேறு மறுப்புரைகளை வழங்கியுள்ளார்கள்

https://www.youtube.com/channel/UCgxokWl1qJWEGV0_YXRpOuA

https://www.facebook.com/Sabeelulmumineenofficial/

தம்பி சாராதவர் முஸ்லிம்களில் தரம் குன்றியவர் என்ற கருத்தை சூப்பர் முஸ்லிம் எங்கேயும் சொல்லவே இல்லை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இந்த பதிவு இடப்பட்டுள்ளது

If u watch super Muslim Videos 💯definitely u will lost ur Iman
BeCareful it's cancer of muslim ummath

Super Muslim
எந்தெந்த விடயங்கள் பிழை என்று ஆராய்ந்து அவைகளை சுட்டி காட்டி அவரை நேர் வழியில் கொண்டு வர முயற்சி செய்ங்களே.

Super Muslim
எந்தெந்த விடயங்கள் பிழை என்று ஆராய்ந்து அவைகளை சுட்டி காட்டி அவரை நேர் வழியில் கொண்டு வர முயற்சி செய்ங்களே.

அது சரி இந்தப்பதிவி அவருக்கு உதவவா அல்லது வழிகேட்டைத் தடுக்கவா? எங்கேயோ இடிக்குதே!

Super Muslim a pathu mudiwu eduthaal wali thawari no poweerhal. Naraham thaan.

Post a comment