Header Ads



மீண்டும் உலக சம்பியனாகினார் கபீப், தாயின் சொல் கேட்டு ஓய்வை அறிவித்தார் (தந்தையை நினைத்து கவலை - முழு உலகமும் அழுதது)

அபுதாபியில் 24.10.2020 நடைபெற்ற UFC 254  lightweight  champion போட்டியில், அமெரிக்க வீரரான  ஜஸ்டின் கெய்தேவை (Justin Keidev) இரண்டாவது சுற்றிலேயே தோற்கடித்து மீண்டும் உலகின் அசைக்க முடியாத வீரராக கபீப் நூர்முஹம்மட் மகுடம் சூடினார்.

ரஷ்யா நாட்டு வீரரான 31 வயதுடைய  கபீப் இன்றைய போட்டியோடு மொத்தமாக   29 :0 போட்டிகளில் பங்குபற்றி  வெற்றிபெற்றுள்ளார்.  UFC இல் எந்தவொரு போட்டியாளராலும் தோற்கடிக்க முடியாத வீரராகத் திகழ்கின்ற கபீப், முதலாவது தடவையாக  தனது  தந்தையை இழந்த நிலையில் இப்போட்டியில்  கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரொனா தொற்றுக்குள்ளாகி அவரது தந்தை நூர்முஹம்மட் மரணமானார். இன்றைய போட்டியில் தனது வெற்றியை கண்டுகளிக்க தந்தை இல்லாத தருணத்தை எண்ணிய ஹபீப், தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அரங்கில் கண்ணீர் விட்டழுத காட்சி முழு உலகிலுமுள்ள அவரது ரசிகர்களையும் அழ வைத்தது.

அதுபோல் இன்றைய போட்டியோடு தனது ஓய்வையும் உலகிற்கு அறிவித்துள்ளார். தனது தாயாருக்கு வழங்கிய உறுதி மொழிக்கமைவாக  இதுவே தான்பங்குபற்றும் UFC  யின் கடைசி போட்டி என்பதையும் உலகிற்கு அறிவித்துவிட்டு கண்ணீர் மல்க விடைபெற்றுச் சென்றார்  உலக சம்பியன் ஹபீப் நூர்முஹம்மட்.



No comments

Powered by Blogger.