Header Ads



தமது சொந்த வரலாற்றை அறியாமையினால், நிராகரிக்கும் இலங்கை முஸ்லிம்கள்


 இலங்கை மக்களின் வரலாறு, அதன் தொன்மை என்பன கால எல்லை கடந்தது, மட்டுமல்ல அது மனித இனத் தோற்றத்துடன் தொடர்புபடுகின்றது, என்ற ஆய்வு ரீதியான நிரூபணங்கள் இன்று தொல்லியல் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுவதுடன் , அதற்கான ஆதாரங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன,"  

இது இலங்கையில் முஸ்லிம் பூர்வீகக் கருத்துக்களை  நிறுவுவதற்கான ஆதாரங்களையும் வெளிப்படுத்துகின்றது,   அது தொடர்பான ஒரு பதிவே  இதுவாகும்

#பட்டதொம்பகுகை ..

இலங்கையின் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள  குருவிட்ட பிரதேசத்தில் பட்ட தொம்ப குகை உள்ளது, மலை அடிவாரத்தில் இருந்து  கிட்டத்தட்ட 2 km ஏறிச் செல்லும் போது, அருவிகளும், காடுகளும், இடை இடையே, இறப்பல், தேயிலை மரங்களையும் கடந்து செல்லும் போது, குறித்த  Basin வடிவிலான மலை உச்சியை அடைய முடியும்,இதில் 3 பெரிய குகைகள் உள்ளன,..

  #மனிதவரலாறு...

குறித்த குகையில் Homosapiyans, கால மனிதர்கள் வாழ்ந்தற்கான , அல்லது அக்காலத்திற்குரிய எச்சஙகளும், எலும்புகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன, இதன் காலம் இலங்கையில் இன்று எழுதப்பட்டுள்ள வரலாற்றிற்கு முற்பட்ட(Pre Historic)காலமாகும்,இது தொடர்பான விபரங்கள் "பலாங்கொடை மினிஷ்சு" என சிங்களத்தில் அழைக்கப்படுகின்றது...

 தொல்லியல் கண்டு பிடிப்புக்கள், 

இங்கு , கடற் பொருட்கள், சுறாவின் பல், முத்துக்கள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன, இவை,அக்கால, மனிதர்கள் பயன்படுத்தியவையாகவோ, கொண்டு வந்தவையாகவோ இருக்க முடியும் என பி.ஏபி. தெரணியகல,  மற்றும் சிறான்  தெரணியகல ,பேராசிரியர், ராஜ் சோம தேவ,  ஆய்வுகள் குறிப்பிடுகின்றன, 

முஸ்லிம்  வரலாற்று ஆதாரம், 

இலங்கை முஸ்லிம் வரலாற்றில், வாவா ஆதம் மலையும், முஹிதீன் அப்துல் காதிர் ஜீலானி யுடன் தொடர்புபடும், தப்தர் ஜீலானி எனப்படும், "கூரகலயும், " குறித்த மாவட்டத்திலும், அதனை அண்மித்த மாவட்டஙகளிலேயே அமைந்துள்ளன, 

இதில் ஆதம் மலையின் வரலாறு, உலகின் முதல்மனிதனுடன் தொடர்பு பட்டது, 

ஆனாலும்,  ஆதம் மலை(சிறிபாத)  பௌத்தர்களின் புனிதமான இடமாக்கப்பட்டுள்ளதால், அதில் ஆய்வுகளுக்கு, இடமளிக்கப்படவில்லை, இடம் பெற்றிருப்பின் இன்னும்பல விடயங்கள் வெளிவந்திருக்கும், 

#வரலாறும், #வழிபாடும், 

இலங்கை முஸ்லிம்கள் தமது சமய நம்பிக்கையை வெறும் வழிபாட்டு கண்  நோக்கிலேயே பார்க்கின்றனர். அதனால் இவ்வாறான இருப்போடு தொடர்பு பட்ட இடங்களை,  அதன் ஆழமறியாமல் சமய நம்பிக்கைக் கண்களால் மட்டும் நோக்கி இலகுவாக நிராகரிக்கின்றனர்,   மாறாக, இவை இலங்கை வரலாற்றுடன் மட்டுமல்ல,  உலக  வரலாற்றுடனும் தொடர்புபட்டவை என்பதற்கான ஆதாரங்களை தொல்லியலாளர்கள் இன்று முன்வைக்கின்றனர். 

எனவேதான் சியாறங்களும், புராதன இடங்களும் குறிப்பாக தப்தர் ஜெய்லானி போன்ற உலக வரலாற்றுடன் தொடர்புபட்ட இடங்களில் எமது, நடமாட்டத்தையும், செயற்பாடுகளையும் அதிகரிப்பதன்மூலமே, இவ்வரலாறுகளுடன் இலங்கை முஸ்லிம் வரலாறும், தொன்மையும் தொடர்புபட்டது என்பதை இலகுவாக நிரூபிக்க முடியும்,

வரலாற்றிற்கு முந்திய முஸ்லிம் வரலாறு...

 இலங்கையில் இன்று எழுதப்பட்டுள்ள வரலாற்றுக்கு முற்பட்டது, முஸ்லிம் வரலாறு, என்பதை நிரூபிக்க சிறந்த ஆதாரங்களாக இருப்பது, வாவா ஆதம் மலையும், தப்தர் ஜெய்லானியும், அங்குள்ள வரலாற்று எச்சங்களாக இன்றுள்ள சியாறங்களும்,அறபு கல் வெட்டுக்களும், ,மற்றும், மக்கள் வாய்வழியாகச் சொல்லுகின்ற, நம்புகின்ற, வழக்காறுகளும்,  வரலாற்று விடயங்களுமே ஆகும், 

#வரலாற்று #முரண்பாடும், #போட்டியும்

இலங்கையில் சிங்கள பௌத்த இனவாத வரலாற்றைப் பேசுவோர், இலங்கையின் வரலாற்றை தனி சிங்கள, பௌத்த  வரலாறாக , மட்டுமே பார்க்கின்றனர், மட்டுமல்ல புத்தருக்கு முந்திய வரலாற்றையும், தமக்கான ஆதாரங்களால் மூடி மறைக்க  முற்படுகின்றனர் 

உதாரணமாக, 

புத்தர் இலங்கையில் பிறந்த்தாகவும், இராவணனின் பரம்பரை எனவும் இன்று, சிலரால். கூறப்படுகின்றது, 

#கட்டாயம் , சிந்திக்கவும் செய்யவும்  வேண்டியது,...

 ...ஆனால் இலங்கை முஸ்லிம்கள் தம் சொந்த வரலாற்றை தமது அறியாமையினால் தாமே நிராகரிக்கின்றனர்.  இனியாவது, ...வரலாற்று இடங்களையும், மக்கள் கூறும் வாய்வழிக்கதைகளையும், நம்பிக்கைகளையும், வெறும் சமயவாதக் கருத்துக்களால் நிராகரிக்காமலும், இயக்க வேறுபாடுகளால், இருப்புக்களை அழிக்காமலும் ,அவற்றைப் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்..

இலங்கையில் முஸ்லிம் வரலாற்றை வாய்வழியாக,மட்டுமல்ல ,ஆய்வுகள் ரீதியாகவும் நிருபிக்க முடியும், அதற்கு எமது அவசரத்தேவை, வரலாறு, " தொல்லியல் அறிவுள்ள (Archeological) புலமையாளர்களும், அதற்காக பாடுபடக்கூடிய ஆர்வமுள்ள இளைஞர்படையுமே ஆகும், ...இதனை,சமூகத்  தலைவர்களும், உலமாக்களும், அறிஞர்களும் அதிக கவனத்தில் கொள்ள வேண்டும், 

 இனியாவது,  இவை பற்றிச் சிந்தித்து, எம் எதிர்கால சந்த்தியின் இருப்புக்காக, இன்றுள்ள எம் எஞ்சியுள்ள வரலாற்று இடங்களையாவது, அழிக்காது காப்போம்.

MUFIZAL ABOOBUCKER

UNIVERSITY OF PEEADENIYA


3 comments:

  1. எமது "முஸ்லிம் புத்திஜீவிகள்" வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும், மேற்கிலும், வட கிழக்கிலும், வட மேற்கிலும், தென்கிழக்கிலும், ஊவாவிலும், சபரகமுவவிலும், மத்தியிலும், ஏன் தென் மேற்கிலும் தனித்தனியாக நிறைந்து காணப்படுகினறனர். ஆனால் அவரகளில் எவரும் இலங்கையில் இல்லை எனபதுதான் மிகுந்த வருத்தத்திற்குரியது. அவரகள் இலங்கையில் இருந்திருந்தால் ஏனைய இன புத்திஜீவிகளுடன் நெருக்கமாக உறவாடி முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் நடைபெறக்கூடிய "வன்முறை" களை அகற்றியிருப்பார்கள் அல்லது அகற்ற முயற்சித்து இருப்பார்கள்..

    ReplyDelete
  2. மேற்படி சகோதரர் எம் அபூபக்கர் அவர்களின் கூற்றுக்கள் ஆழ்ந்து உற்று நோக்கப்பட வேண்டிய வை.இந்த நாட்டிலே எமது இருப்பையும் வரலாற்றையும் பறைசாற்றும் சாதனங்களில் முக்கியமானது எமது இஸ்லாமிய பெரியார்களின் ஸியாறங்களும் ஒன்றாகும்.அதற்காக ஸியாறங்களை வணங்கி வழிபாடு செய்வதல்ல இஸ்லாமிய வரையறைக்குள் அவைகள் தரிசிக்கப்பட்டு பாதுகாக்க படவேண்டும்.திருகோணமலை மாவட்டத்தில் சல்லி என்ற ஒரு கடலோர கிராமத்தில் 1994ம் வருடம் PRA என்ற ஒரு கிராமிய அபிவிருத்தி சம்பந்தமான
    கள ஆய்வுக்காக சென்றிருந்தோம். அதன்போது அங்கே 60 அடி நீளமான ஒரு ஸியாரம் இருப்பதை
    கண்டோம். இதுபற்றி அம்மக்களிடம் விசாரித்த போது வரலாற்றுக்கு முற்பட்ட கால ஒரு முஸ்லிம்
    பெரியாரின் சமாதி என அவர்கள் கூறுகின்றனர்.ஆனால் அங்கு700 குடும்பங்கள் வாழ்கின்றார்கள் அதில் ஒரு முஸ்லிம் குடும்பமும் இல்லை.ஆனால் அந்த ஸியாரம் வெள்ளை அடிக்கப்பட்டு அந்த மக்கள் அதை பராமரித்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.எனவே
    ஆதம்(அலை) அவர்கள் தொடக்கம் இஸ்லாமிய மார்க்கம் இருந்து வந்தது என்பது இது ஒரு சான்றாக உள்ளதை அவதானிக்கலாம்.அதுமட்டுமல்ல முஸ்லிம்கள் இங்கு இலங்கையில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்தார்கள் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரமாகும்.

    ReplyDelete

Powered by Blogger.