Header Ads



மைத்திரிபால மீது தொடர் விசாரணை - தயாசிறி விசனம்


ஈஸ்டர் ஞாயிறு தினம் நாட்டில் நடந்த குண்டு தாக்குதலை நடத்தியது யார் என்பதை கண்டறிவதை விட தற்போது நபர்களின் பின் செல்வதை காணக் கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைத்து விசாரணைக்கு உட்படுத்துவது தொடர்பாக கொழும்பில் நேற்று செய்தியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே தயாசிறி இதனை தெரிவித்துள்ளார்.


இதன்போது அவர் மேலும் கூறுகையில்,


குறித்த தாக்குதல் சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மூன்று நாட்களில் சாட்சியத்தை பெற்று முடிப்பதாக கூறினாலும் தற்போது மேலும் மூன்று நாட்கள் அதிகரித்துள்ளனர்.


இதற்கான காரணம் என்ன என்பதை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தயாசிறி கூறியுள்ளார்.


அத்துடன், ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர்கள் ஒரு புறமாக இருக்கும் போது அதில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.