யாழ். புங்குடுதீவில் ஆலயப் பூசகர் ஒருவர் இன்று அதிகாலை அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உதவியாளரைக் கட்டிவைத்து விட்டு இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் ஆலயப் பூசகரான கிளிநொச்சியைச் சேர்ந்த ரூபன் சர்மா (வயது-33) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலைக்கான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை.
பூசகரின் கொலையுடன் உதவியாளருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறியவருகிறது.
0 கருத்துரைகள்:
Post a comment