Header Ads



இஸ்லாத்தின் மீதான விரோதப் போக்கு காரணமாக, மக்ரோனுக்கு மனநல சிகிச்சை தேவை - எர்துகான்


மத்திய கிழக்கு நாடுகள் சிலவற்றில் பிரெஞ்சுப் பொருள்களைப் புறக்கணிக்கும் அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன.

இஸ்லாம் தொடர்பாக அதிபர் மக்ரோன் வெளியிட்ட கூற்றுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகவே சில இஸ்லாமிய நாடுகளில் பிரெஞ்சுப்பொருள்களைப் புறக்கணிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று ஏஎப்பி(AFP) செய்தி தெரிவிக்கிறது.

கட்டார் பல்கலைக்கழகம் தனது பிரான்ஸ் கலாச்சார வார நிகழ்வுகளை ஒத்திவைத்திருக்கிறது. குவைத் பயண முகவர்கள் பிரான்ஸுக்கான உல்லாசப் பயணச் சலுகைகளை நிறுத்தியிருக்கின்றனர்.

பிரெஞ்சு நாட்டு உற்பத்திப் பொருள்கள் பெரிய வணிக வளாகங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. வெண்ணெய்க் கட்டிகள், மற்றும் பிரான்ஸின் பிரபலமான பால்பொருள் உற்பத்திகள் அவற்றின் பெரு விநியோகஸ்தர்களிடம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன என்று குவைத்தின் முக்கிய விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாரிஸில் கழுத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட புவியியல்-வரலாற்று ஆசிரியர் சாமுவல் பட்டியின் இறுதி அஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய மக்ரோன், “பிரான்ஸ் தனது கேலிச்சித்திரங்களையும் ஓவியங்களையும் கைவிட்டுவிடமாட்டாது” என்று உறுதியளித்திருந்தார்.

முகமது நபியை இழிவுபடுத்தும் வகையிலானவை என்று குற்றம் சாட்டப்படும் “சார்ளி ஹெப்டோ” கேலிச் சித்திரங்களுக்கு ஆதரவாகவே அவர் அந்தக் கூற்றை வெளியிட்டிருக்கிறார் என்று முஸ்லிம் நாடுகள் சிலவற்றில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதேவேளை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு மனநல சிகிச்சை தேவை என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் கடுமையாக சாடியுள்ளார்.

இஸ்லாத்தின் மீதான விரோதப் போக்கு காரணமாக மக்ரோனுக்கு மனநல சிகிச்சை தேவை என்று எர்டோகன் கூறினார்.

இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுடன் மக்ரோனின் பிரச்சினை என்ன? அவருக்கு மனநல சிகிச்சை தேவை என்று மத்திய கெய்சேரி மாகாணத்தில் ஆளும் நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சி மாநாட்டில் எர்டோகன் கூறினார்.

தனது நாட்டில் உள்ள மில்லியன் கணக்கான மத சிறுபான்மையினரை இவ்வாறு வழி நடத்தும் தலைவரிடம் வேறு என்ன சொல்ல முடியும்? என எர்டோகன் கூறினார்.

இஸ்லாம் பிரச்சினைக்குரிய மதம் என்று மக்ரோன் அழைத்ததைத் தொடர்ந்து பிரான்ஸ் சமீபத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பிரச்சாரம் தொடங்கியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் பல அரசு சாரா அமைப்புகளும் மசூதிகளும் மூடப்பட்டுள்ளன, அதே நேரத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் உச்சத்தை எட்டியுள்ளன.

அண்மையில் ஜேர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள மசூதியில் பொலிஸ் சோதனை நடத்தியது. ஜேர்மன் பொலிஸ் இந்த நடத்தையை ‘பாசிசம்’ என்று எர்டோகன் குற்றம் சாட்டினார்.

சொந்த குடிமக்கள் மீது இத்தகைய தாக்குதல்களால் ஐரோப்பிய பாசிசம் ஒரு புதிய நிலையை எட்டியுள்ளது என்று அவர் கூறினார்.

4 comments:

  1. "எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் (Torah) இன்ஜீலிலும் (Gospel) இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்;

    அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்;

    பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்;

    தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்;

    கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்;

    அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும்,  (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்;

    எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்".

    (அல்குர்ஆன் : 7:157)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. Good. There should be more co-ordinated actions from all Muslim countries to send a very strong message to France which should also serve as Notice to other countries that any attacks on Islam and Islam's Holy Messenger (PBUH) will Not go Unpunished.

    ReplyDelete
  3. ஏதுர்கான் , மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் முன் ,இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும்.

    ReplyDelete
  4. @ Kumar
    மேலே மர்யம் பெத்ரோனின் கடிதம் உங்களை போன்றோருக்கும் தான். கட்டாயம் படித்துவிட்டு கருத்துச் சொல்லுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.