Header Ads



மக்களை பாதுகாக்கவே கொரோனா, கட்டுப்பாட்டு சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன


மக்களை பாதுகாக்கும் நோக்கிலேயே கொவிட்-19 கட்டுப்பாட்டுச் சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் -16- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 கட்டுப்பாட்டு சட்டங்கள் நாட்டு மக்களை அசௌகரியப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை எனவும், மக்களை பாதுகாக்கவே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாள் ஒன்றில் சுமார் 8000 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் நடாத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 கட்டுப்படுத்தும் நோக்கில் மட்டுமே வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட சட்டங்கள் அமுல்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நோய்த் தொற்றுக்கு இலக்கானோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.