Header Ads



நாட்டில் எந்த நேரத்திலும், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படலாம்


நாட்டில் எந்த நேரத்திலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்த நேரிடலாம் என்பதால் மக்கள் எந்த வேளையிலும் தயாராக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண ஊடகமொன்றுக்கு இன்று -06- பகல் வழங்கிய நேர்காணலில் இதனைக் கூறியுள்ளார்.

எனவே மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை சேர்த்துவைத்திருக்கும் வரை ஊரடங்குச் சட்டம் காத்திருக்காது என்றும், ஆகவே எப்போதும் தயாராக இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதேபோல, கொரோனா தொற்றானது திவுலுப்பிட்டிய, கம்பஹா பகுதியில் மாத்திரம் மட்டுப்பட்டிருக்கும் அல்லது அந்த எல்லையை தாண்டி அருகிலுள்ள பிரதேசங்களுக்கு மாத்திரம் வந்திருக்கும் என்றும் கூறமுடியாது. 

சில வேளைகளில் தத்தமது பிரதேசங்களிலும் பரவியிருக்கலாம் என்பதால் மக்கள் மிகுந்த அவதானத்துடன்தான் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

No comments

Powered by Blogger.